புது கண்ணம்மா – Barathi Kannamma today episode 15.11.2021 review
Barathi Kannamma new Kannamma Vinusha
பாரதிகண்ணம்மா சீரியலில் என்று மிகுந்த சர்ச்சைகளுக்கு பிறகு புது கண்ணம்மா வாக வினுஷா இன்று தோன்றினார். பழைய கண்ணம்மா வாக இருந்த ரோஷினி ஹரிப்ரியன் இனி இந்த தொடரில் தொடர மாட்டார் என்பது வருத்தமான செய்தி.
எபிசோடு ஆரம்பத்தில் வேணுவும் சௌந்தர்யாவும் எப்போதும்போல் புலம்ப, பாரதி ஹேமாவிற்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறார். அப்பொழுது ஹேமா கண்ணம்மாவை பற்றி பேச அவர் எல்லா விஷயங்களிலும் தனது மகள் கண்ணம்மாவை நோக்கி போதும் தன்னை விட்டு பிரிந்து செல்வதும் வாடிக்கையாக தொடர்வதை எண்ணிப் பார்க்கிறார்.
பின்னர் ஹேமாவை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, விவாகரத்துக்காக இன்று நீதிமன்றத்திற்கு செல்லப் போவதாக பாரதி கூறுகிறார். சௌந்தர்யாவும் அஞ்சலியும் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். நீதிமன்றத்திற்கு பாரதி செல்ல அங்கு வேணுவும் சௌந்தர்யாவும் வருகிறார்கள். சில நேர காத்திருப்புக்குப் பின்னர் புது கண்ணம்மா உள்ளே நுழைகிறார்.