Mouna Ragam 2 Serial Today Episode | 17.11.2021 | Vijaytv

மௌன ராகம் தொடரில் இன்று, ஸ்ருதி கதம்பரி கார்த்திக் அனைவரும் குடும்பத்தோடு சாப்பிட அமர்ந்தனர். அப்போது ஸ்ருதியிடம் ருக்மணி தருணிடம் பேசவில்லையா என கேட்க, அவரும் நன் பேசினேன் அப்போது தான் ஒரு சந்தோசமான செய்தி கிடைத்தது என்று கூறினார். பின் சத்யா வருண் இருவரும் கொடைக்கானலில் இருந்து வந்த பின் பேசிக்கவே இல்லையாம். இருவருக்குள்ளும் எதோ சண்டையாம் என்று கூறி மகிழ்ந்தார். அதை கேட்ட ருக்மணி,அங்கு நல்ல ஜாலியாக தானே இருந்தனர் இப்போ என்ன ஆச்சு என்று உளரினார். இதனால் ஸ்ருதி ருக்மணி. இருவரும் கொடைக்கானல் போனது தருணை பார்பதற்கு தான் என்று அனைவருக்கும் தெரிந்தது. கார்த்திக் கோவப்பட்டு ஸ்ருதியை கண்டித்தார். பின் சாப்பிடாமல் எழுந்து போய்விட்டார். சுருதியும் சாப்பிடவில்லை. சத்யா வருண் இடம் பேச முயற்சித்தார். ஆனால் வருண் அவரை கண்டுகொள்ளவில்லை. ஷீலா மீண்டும் சத்யா பணத்துக்காக தான் உன்னை திருமணம் செய்து கொண்டார் என்று இன்னும் கோபத்தை தூண்டினார். அவரும் அதை கேட்டு சத்யாவை வெறுத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author