ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் தனக்கு வாங்கிய புது துணிகளை வைத்து தனக்கு போட்டு பார்த்து ரசித்தார். அவர் ரசிப்பதை சந்தியா வெளியில் இருந்து ரசித்தார். சந்தியா உள்ளே வந்ததும் சட்டை எல்லாம் சரி பார்த்ததாக கூறினார் சரவணன். சந்தியா அவரின் அழகை ரசித்து கொண்டு இருந்தாள். அங்கு மயில் வந்து சரவணனை பார்த்ததும் ஆசிரியமாக பார்த்தார். சரவணனுக்கு மிக அருமையாக உள்ளது என்று கூறி வீட்டில் அனைவரிடமும் காட்ட வேண்டும் என்று அழைத்து சென்றார்.பின் வீட்டில் அனைவருமm பார்த்து சந்தோஷம் அடைந்தார்கள். ஆதி மீண்டும் சரவணனை மட்டம் தட்டி பேசினார். இதெல்லாம் தேவை இல்லாத ஆசை என்றும் கூறினார். பின் சிவகாமி ஆதியை கண்டித்தார். சரவணன் மிகவும் அழகாக இருப்பதாகவும் கூறினார். மிகவும் சந்தோஷம் அடைந்தார். அர்ச்சனா தான் டிக்கெட்டை தூக்கி போட்டதால் யாரும் ஊருக்கு செல்ல முடியாது என்ற சந்தோசத்தில் இருந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…