Raja Rani 2 Serial Today Episode | 23.11.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் செல்ல வேண்டிய பயணம் நின்று போனதை நினைத்து சிவகாமி அழுது புலம்பினார். என் பிள்ளை தனக்கு என்று எதும் செய்து கொள்ள மாட்டான், இப்போதான் அவனுக்கான ஒரு முயற்சி எடுத்தான், அதுவும் இப்படி போய்விட்டதே என்று புலம்பினார். வீட்டில் அனைவரும் சாப்பிட அழைத்தார்கள் ஆனால் சிவகாமி எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று கூறினார். அதனால் வீட்டில் யாருமே சாப்பிடாமல் இருந்தார்கள். சந்தியா அனைவரையும் அழைத்தார் ஆனால் சிவகாமி வரவில்லை. பின் மற்ற அனைவரையும் சாப்பிட சொல்லிவிட்டு , சரவணனுக்கு சாப்பாடு எடுத்து சென்றார். அங்கு சரவணன் தனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று கூறினார். ஆனால் சந்தியா மீண்டும் நம்பிக்கையோடு பேசினார். சக்கரையையும் எதற்கும் கவலை பட வேண்டாம், எதாவது ஒரு வழி பிறக்கும் என்று நம்பிக்கை கூறினார். செந்தில் அர்ச்சனாவை சந்தேகபட்டர். இந்த வேலைகள் அனைத்தையும் செய்வது நீயாக தான் இருக்கும் என்று கேட்டார். ஆனால் அர்ச்சனா தான் அதை செய்யவில்லை என்று பொய் சொல்லி சமாளித்தார். ஆனாலும் செந்திலுக்கு சந்தேகம் தீரவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author