மௌன ராகம் தொடரில் இன்று, வருண் தன் கோவதின் காரணத்தை வீட்டில் அனைவரிடமும் கூறுகிறார். தனக்கும் சத்யாவுக்கும் நடந்த திருமணம் கட்டாய திருமணம் போல பணத்தை கொடுத்து செய்த இந்த செயல் பிடிக்கவில்லை என்று கூறினார். மனோகர் எடுத்து சொல்ல முயற்சி செய்தும் பயனில்லை. அவர் யார் பேச்சையும் கேட்பதாக இல்லை. மும்பை கிளம்புவதாகா மீண்டும் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த மனோகர் வருணை கண்டித்து, திட்டி எங்கேயும் போகவிடமாட்டேன் என்று கூறினார். பின் சத்யா வருணிடம் பேச முயற்சித்தார். ஆனால் சத்யா சொல்லும் எதையும் கேட்கும் நிலையில் வருண் இல்லை. பணத்திற்காக மட்டுமே இந்த கல்யாணம் நடந்ததாக நம்பினார். சத்யா காட்டிய அன்பு அனைத்தும் நாடகம் என்று கூறினார். இதனால் மிகவும் வருத்தம் அடைந்தார் சத்யா. மனோகர் வருண் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் சத்யாவிடம். அடுத்து என்ன நடந்தது?வருண் சமாதானம் ஆனாரா? காணொளியை பார்க்க….