Pandian Stores today episode 27.11.2021 review

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று மீனா தன் அப்பாவிடம் கண்ணனைப் பற்றி தெரிந்து கொள்ள முயற்சிக்க, முல்லை அதை தடுத்து விடுகிறார். கவலையாக இருக்கும் கண்ணனிடம் ஐஸ்வர்யா ஆறுதல் கூறி அவரை ஆறுதல் படுத்துகிறார்.

கதிரும் ஜீவாவும் கண்ணனைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது மூர்த்தி அங்கே வருகிறார். மூர்த்தி கண்ணன் வியாபாரத்தை ஒழுங்காக செய்ததாகவும் கடை லாபத்தில் இருப்பதாகவும் கூறி மகிழ்ச்சி அடைகிறார். மூன்று சகோதரர்களும் கண்ணனை எண்ணி சந்தோஷப்படுகிறார்கள்.

ஐஸ்வர்யா புதிதாக வீட்டு வாசலில் இட்லி கடை ஆரம்பிக்கிறார். அதை பார்த்து முல்லை எரிச்சல் படுகிறார். முல்லை தனத்தை கூட்டிவர, தனமும் இதை பார்த்து குழப்பமாகிறார். கடைசியாக அங்குவந்த கஸ்தூரியும் ஐஸ்வர்யாவிடம் வெறுப்பாக பேசிவிட்டு செல்கிறார்.

About Author