அன்றும்,இன்றும்,என்றும் ஸ்டைல், மாஸ் என்றால் அது ரஜினி காந்த் என்னும் நடிகன் தான்!
46 வருடங்களாக கலை உலகத்தின் அரசனாக, இன்னமும் யாராலும் தொட முடியாத உயரத்தில் வீற்றிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் என்னும் மாபெரும் கலைஞனுக்கு இன்று 71 ஆவது பிறந்த தினம்.
ஒரு 15 வருடத்திற்கு முன்னால் குழந்தைகளிடம், உனக்கு பிடித்த ஹீரோ யார் என்று கேட்டால், கேள்வியின் பாதியிலேயே ரஜினிகாந்த் என்று சொல்லிவிடுவர். அந்த அளவுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன்னால் ஈர்த்து வைத்து இருந்தவர். நடை, உடை, பாவனை, நடிப்பு என யாவற்றிலும் தனக்கென ஒரு ஸ்டைலை வைத்து இருப்பார்.
கையில் பேப்பரை சிகரெட் போல சுருட்டி வைத்துக் கொண்டு, ரஜினிகாந்த் அவர்கள் போல தூக்கி வாயில் பிடித்து பார்க்காத 90 கிட்ஸ் குழந்தைகள் இங்கும் யாரும் இருந்து விட மாட்டோம். அந்த அளவுக்கு நமக்கு பதிந்தவர். 1975-இல் கே.பாலசந்தரின் ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தின் மூலம் தனது திரைப் பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த் அவர்கள், இன்றளவும் அதே உத்வேகத்துடன் இந்த கலைக்கு உழைத்துக் கொடுப்பது தான் அவரின் வெற்றிக்கும் ஆகப் பெரும் காரணமாக இருக்க முடியும்.
“ இன்னிக்கும் ராஜா நான் கேட்டுப்பாரு சும்மா கிழி, என்ற பாடல் வரிகளுக்கு அர்த்தம் தருவது போல இன்றும் அவர் படம் இறங்கினாலும், பாக்ஸ் ஆபிஸ்சில் தனிக்காட்டு ராஜாவாக நின்று களை கட்டும், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், ரஜினிகாந்த் சார் “