தென் ஆப்பிரிக்க தொடரில் இருந்து விலக இருக்கிறாரா விராட் கோலி?
முறையற்ற முறையில் ஒரு நாள் போட்டிகளுக்கான தலைமைப் பொறுப்பு விராட் கோலியிடம் இருந்து பறிக்கப்பட்டு ரோஹிட் சர்மாவுக்கு வழங்கப்பட்ட நிலையில், வருகின்ற தென் ஆப்பிரிக்க தொடரில், விராட் கோலி விலக இருப்பதாக நம்பத்தகுந்த கிரிக்கெட் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்து வருகின்றன.
டி20 உலக கோப்பைக்கு பிறகு விராட் கோலி டி20 தலைமைப் பொறுப்பில் இருந்து மட்டும் தானாகவே விலகி இருந்தார். இதன் காரணமாக டி20 போட்டிகளுக்கு ரோஹிட் சர்மாவும், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு விராட் கோலியும் தலைமைப் பொறுப்பை ஏற்று வந்தனர். இதனால் அணியில் இரட்டை தலைமை நீடித்து வந்தது. லிமிட்டடு ஓவர் கிரிக்கெட்டுகளில் இரண்டு தலைமை இருந்தால் அணியை வழிநடத்துவது சிரமமாக இருக்கும் என்ற இந்த கருத்தை முன் வைத்து, விராட் கோலியை ஒரு நாள் போட்டி தலைமைப் பொறுப்பில் இருந்து திடீரென்று நீக்கி ரோஹிட் சர்மாவை தலைமைப் பொறுப்பில் அமர வைத்தது பிசிசிஐ.
விராட் கோலி பொறுப்பில் இருந்து விலகுவதற்கு 48 மணி நேரம் கால அவகாசம் கேட்டும் கூட அதை மதிக்காமல் உடனே ரோஹிட் சர்மாவை தலைமைப் பொறுப்பில் அமர்த்தியது பிசிசிஐ. இந்த விவகாரத்தால் உடைந்து போல விராட் கோலி வருகின்ற டிசம்பர் 26 அன்று முதல் ஆரம்பிக்க இருக்கும் 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தென் ஆப்பிரிக்க தொடரில் இருந்து விலக இருப்பதாக நம்பத்தகுந்த கிரிக்கெட் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்து வருகின்றன.
“ 70 சதவிகிதம் வெற்றியை பதிவு செய்திருக்கும் ஒரு இந்திய அணியின் கேப்டனை, முறையின்றி நீக்கி வேறு ஒருவரை பிசிசிஐ அமர்த்தி இருப்பது இந்திய ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது “