கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 7,447 பேருக்கு புதியதாக கொரோனா!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,447 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 391 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,76,869 ஆக உயர்ந்து இருக்கிறது.

இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 7,886 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 136 கோடியைக் கடந்து இருக்கிறது. தேசத்தில் 63.5 சதவிகிதம் பேர் குறைந்தபட்சம் ஒரு தவணையாவது தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.

“ கொரோனா தடுப்பூசிகளை முறையாக கையாத நாடுகளே, அதிகளவு உயிரிழப்புகளை சந்தித்து வருகின்றன. அந்த வகையில் வளர்ந்த நாடான அமெரிக்கா தனது நாட்டில் 8 லட்சம் உயிர்களை கொரோனாவுக்கு பலி கொடுத்து இருக்கிறது “

About Author