இந்தியா மூன்றாவது அலையை கிட்ட தட்ட நெருங்கி விட்டது – ஐஐடி கான்பூர்
இந்தியா மூன்றாவது அலையை கிட்ட தட்ட நெருங்கி விட்டதாக ஐஐடி கான்பூர் ஆராய்ச்சி குழுவினர் அறிக்கை விடுத்து இருக்கின்றனர்.
இந்தியாவில் ஒமிக்ரான் தீவிரமெடுத்து வரும் நிலையில், மூன்றாவது அலையை வெகு விரைவில் இந்தியா எதிர்கொள்ளும் என எச்சரிக்கை விடுத்து இருக்கின்றனர் ஐஐடி கான்பூர் ஆராய்ச்சி குழுவினர். தொற்றின் வீரியம் படிப்படியாக உயர்ந்து வரும் இந்த வேளையில் டெல்மைக்ரான் எனப்படும் புதிய வைரஸ் திரிபு ஒன்று வேறு இந்தியாவில் உருவாகி இருக்கிறது.
“ உலகளவில் பயமுறுத்தி வரும் ஒமிக்ரான் தொற்று ஒன்றிரண்டாக கண்டறியப்பட்டு தற்போது 400+ என்ற நிலையில் வந்து நிற்கிறது. இது இன்னும் எந்த எல்லை வரை செல்லும் என்பது யாராலும் கணிக்க முடியாததாகவே இருக்கிறது “