தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியின் திருமணத்திற்கு கடன் வாங்க சென்றார்கள் சொக்கலிங்கம் மற்றும் வாசுகி. இதை தமிழ் மூலம் தெரிந்து கொண்ட சரஸ்வதி தன் பாட்டியிடம் கேட்டார். பாட்டியும் உண்மையை கூறினார். சரஸ்வதிக்கு வருத்தம் அதிகரித்தது. தனக்காக தன் அப்பா இருக்கும் பணம் மட்டும் இல்லாமல் மேலும் கடன் வாங்குவது சரி அல்ல என்று நினைத்தார். சற்று நேரத்தில் சொக்கலிங்கம் மற்றும் வாசுகி வீட்டிற்க்கு திரும்பினார்கள். சரஸ்வதியை மாடிக்கு ஒரு வேலையாக அனுப்பிவிட்டு பின் அங்கு பணம் கிடைக்க தாமதம் ஆகும் அதனால் வேறு இடத்தில் வட்டிக்கு பணம் வாங்க போவதாக கூறினார். இதை கேட்ட சரஸ்வதி மனம் உடைந்து போனார். உடனே தமிழுக்கு அழைத்து வீட்டில் நடக்கும் அனைத்தையும் கூறினார். தமிழும் அதை கேட்டு மிகவும் வருந்தினார். தான் எதாவது செய்ய வேண்டும் என்று கூறினார். நான் உடனே அம்மா விடம் பேசிபார்க்கிரேன் என்று கூறினார். கோதை வசுவுக்கு தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தார். நல்ல நேரம் எல்லாம் பார்த்து குறித்து வைத்தார்கள். இது தெரியாத சந்திரகலா கோதை வீட்டிற்க்கு வந்து கோவத்தில் குதித்தார். அப்படி என்ன பேசினார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…