கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 1,79,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,79,723 கொரோனா தொற்று பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,79,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் கொரோனா தொற்றுக்கு 146 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,83,936 ஆக உயர்ந்து இருக்கிறது.

“ ஆராய்ச்சிகளின் அடிப்படையில் ஜனவரி இறுதிக்குள், தினசரி தொற்று பத்து லட்சத்தைக் கடக்கும் என சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து இருப்பதால், மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது “

About Author