தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் வீட்டிற்கு வசுந்தரா தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு செய்ய உறவினர்கள் வர ஆரம்பித்தார்கள். சந்திரகலா கோதை வீட்டுக்கு வந்து சேர்ந்தார். வந்ததும் அனைவரும் அவரை வர வேர்த்தார்கள். வசு தன் அம்மாவை தனியாக அழைத்து சென்று, இந்த விசேஷம் முடியும் வரை எதுவும் பேச வேண்டாம் என்று கூறினார். நீங்கள் பேசுவது மற்றவர்களுக்கும், குறிப்பாக சரஸ்வதி குடும்பத்தை பாதிக்கிறது. அதனால் எதுவுமm pesa வேண்டாம் என்று முன்கூட்டியே கூறினார். சந்திரகலாவும் அதற்கு சரி என்று கூறினார். பின் சரஸ்வதி, வாசுகி மற்றும் மின்னல் மூவரும் கோதை வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். கோதை வாசல் வரை வந்து வரவேற்றார். அதை பார்த்த சந்திரகலா எரிச்சல் அடைந்தார். பின் விசேஷம் ஆரம்பித்தார்கள். அனைவரும் சாமி கும்பிடும் நேரம் தமிழ் சரஸ்வதியை மாடிக்கு அழைத்தார். பின் இருவரும் மாடியில் இருந்தார்கள். தன் அறையை சுற்றி காமித்தார் தமிழ். அப்போது தனக்கு ஒரு முத்தம் தருமாறு கேட்டார். சரஸ்வதியும் தயங்கி தயங்கி கொடுக்க வரும் நேரத்தில் நமச்சி அங்கு வந்தார். பின் அனைவரும் வசு தாலியை மாற்றினார்கள். இந்த சடங்கு முடிந்ததும் அங்கு வந்த எல்லாருக்கும் புடவை மஞ்சள் கயறு குங்குமம் என கொடுப்பது வழக்கம். ஆனால் சந்திரகலா தன் பகட்டை காட்ட வேண்டும் என்று நினைத்தார். வசுவுக்கு 25 லட்சத்தில் வைர நகையும், கார்த்திக்கு 5 லட்சத்தில் வைர மோதிரம் போட்டார். அதோடு நிறுத்தாமல் வந்தவர்கள்களுக்கு 15 ஆயிரத்தில் புடவை, ஒரு சவரன் நகை என அடுக்கினார்.இதை பார்த்த கோதை என்ன செய்தார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…