தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை செய்தது தவறு என்று கார்த்திக் மற்றும் வசுந்தரா இருவரும் மனதில் பட்டதை கூறினார்கள். இதனால் வீட்டில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. தமிழ் அம்மா விடம் எதற்கு இப்படி பேசுகிறாய் என்று கேட்டார். பின் கோதை இதை பெரிது படுத்த வேண்டாம். சம்பந்தி செய்யும் சீர் வரிசையை நான் கேட்கவில்லை, சரஸ்வதி வீட்டில் இருந்து வருவதால் தடபுடலாக எதும் வேண்டாம் என்று கூறி இருந்தேன். ஆனால் அதையும் மீறி இதெல்லாம் செய்ததால் சின்ன வருத்தம் தான் . இனி இதை பற்றி யாரும் பேச வேண்டாம் என்று கூறினார். தமிழ் சரஸ்வதிக்கு அழைத்து பேசினார். அவர் வீட்டில் நடந்ததற்கு வருந்தினார். சரஸ்வதியும் அதை பற்றி பேச வேண்டாம் அது முடிந்து போன விஷயம் என்றார். பின் அடுத்த நாள் பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பம் ஆனது.வசு கார்த்திக் இருவருக்கும் தலைப்பொங்கல்.கோதை இந்த வீட்டு மருமகளாக இந்த குடும்ப நகையை போட்டு பொங்கல் வைக்குமாறு சொன்னார். அதன் படியே வசு செய்தார்.பின் அவரே சரஸ்வதிக்கு வாழ்த்து சொல்லலாம் என்று விடியோ கால் செய்தார். சரஸ்வதி வீட்டிலும் பொங்கல் வைத்துக்கொண்டு இருந்தார்கள். பின் இருவீட்டாரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…