பிக்பாஸ் 5 தமிழ் | Day 102 | Promo 1 | ‘இல்லத்திற்குள் சிரிப்பு அலைகளுடன் நுழையும் தாமரை’
பிக்பாஸ் 5 தமிழின் நூற்று இரண்டாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஒரு வழியாக தாமரை இல்லத்திற்குள் நுழைந்தார். தாமரை வெளியேறிய பின்பு இல்லத்தில் நிச்சயம் ஒரு தொணிவு இருந்தது என்றே சொல்ல வேண்டும். தற்போது அந்த தொணிவை எல்லாம் தூக்கி எறிந்து இல்லத்தை குதூகலமாக்கிட மீண்டும் உள்ளே என்ட்ரி கொடுத்து இருக்கிறார் புன்னகைக்கும் பூவாக நமது தாமரை.
“ போட்டி, சண்டை, அழுகை, கோபம் என்று நிறைந்து இருந்த இல்லம் கடந்த சில நாட்களாக புன்னகைகளால் ததும்பி வழிகிறது “