கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் இரண்டரை லட்சத்தை தொட்டது தினசரி கொரோனா தொற்று’

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று இரண்டரை லட்சத்தை தொட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,47,417 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 481 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,84,859 ஆக உயர்ந்து இருக்கிறது.

“ நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகளின் விளைவால் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது “

About Author