உக்ரைன் எல்லையில் நவீன ஆயுதங்களுடன் குவியும் லட்சக்கணக்கான ரஷ்ய படைகள்!
உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா உள்நுழையப் பார்ப்பதாலேனோ ரஷ்யா முன்னெச்சரிக்கையாக உக்ரைன் எல்லையில் தனது படையை குவித்து வருகிறது.
முன்னொரு காலத்தில் சோவியத் யூனியனுடன் சேர்ந்து இருந்த ரஷ்யா-உக்ரைன் நாடுகள், பின்னர் தனித்தனி நாடாக பிரிந்தன. தற்போது நிலவும் சூழலில் உக்ரைன் அரசு, அமெரிக்க அரசுடன் கூட்டு வைக்க முயல்வதால், ரஷ்யா எச்சரித்து தனது படைகளை உக்ரைன் எல்லையில் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
“ ஒரு பக்கம் ஐரோப்பிய யூனியனில் இணைய முயற்சிக்கும் உக்ரைன், இன்னொரு பக்கம் ரஷ்யா, இன்னொரு பக்கம் அமெரிக்கா என்று ஒரு நாட்டினை இரண்டு நாடுகள் உக்கிரம் ஆக்கி வருகின்றன “