Tamizhum Saraswathiyum Today Episode | 18.01.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை தன் ஃபேக்டரியில் தீ பிடித்ததை பார்த்து நொந்து போனார். சந்திரகலா தான் நினைத்தது போல். நடந்ததை நினைத்து சந்தோசம் கொண்டார். கொதையிடம் வருத்தமாக பேசுவது போல் பேசி அவரை மீண்டும் காயப்படுத்தினார். கொஞ்ச நாள் ஃபேக்டரியை நிறுத்தி வைக்க வேண்டும் இல்லை என்றால் தமிழ் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று கூறினார். உடனே கோதை ஜோசியரை கோவிலுக்கு அழைத்தார். கோவிலில் சொக்கலிங்கம் மற்றும் குடும்பத்தில் அனைவரும் மிகுந்த வேதனையுடன் இருந்தார்கள். ஜோசியர் வருவதற்கு முன்பே எதையாவது சொல்லி இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று கீதா மற்றும் சந்திரகலா முயற்சித்தார்கள். சரஸ்வதியின் ராசி தான் இப்படி என்று பட்டம் கட்ட பார்த்தார்கள். பின் ஜோசியர் வந்து தமிழ் சரஸ்வதி ஜாதகத்தை பார்த்து அதில் எந்த குழப்பமும் இல்லை. இவர்களுக்கு தாராளமாக திருமணம் செய்யலாம் என்று கூறினார். இந்த விபதிர்க்கும் இந்த கல்யாணத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார். இதை கேட்ட குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் சந்திரகலா அதெப்படி அபசகுணம் ஆகாது சரியாக பார்த்து சொல்லுமாறு கூறினார். ஆனால் அவர் திட்டவட்டமாக கூறினார். பின் குறித்த நேரத்தில் பொன் உருக்கும் விசேஷம் நடந்தது.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author