ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் சூர்யாவின் ‘ஜெய் பீம்’!
Suriya Jaibhim Scenes In Oscars Official Youtube Page
சூர்யாவின் நடிப்பில் வெளியாகி இருந்த ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் சீன்கள் , ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.
2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் ஞானவேல் அவர்களில் இயக்கத்தில், சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் காட்சிகள் ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ யூடியூப் வலை தளத்தில் வெளியாகி இருப்பது அப்படத்திற்கு கிடைத்த மற்றுமொரு மகுடம்.
“ சமூக கருத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் தற்போது தமிழ்சினிமாவில் சற்றே தலை தூக்குகிறது. அந்த வகையில் எடுத்திருக்கப்படும் படமான ‘ஜெய் பீம்’க்கு ஆஸ்கரின் மூலம் ஒரு மகுடம் கிடைத்து இருப்பது மகிழ்ச்சியே “