சென்னை தியாகராஜ நகரில் இயங்கி வரும் பிரபல சரவணா ஸ்டோர்ஸ் கடை நிலுவைக் கடனால் ஜப்தி செய்யப்பட்டு இருக்கிறது.
சென்னை தியாகராஜா நகரில் இயங்கி வரும் பிரபல பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடை, இந்தியன் வங்கியில் பெற்ற 120 கோடி கடன் நிலுவைத் தொகைக்காக, வங்கி ஊழியர்களால் ஜப்தி செய்யப்பட்டு இருக்கிறது. பிரபலமான பெரிய கடை ஒன்று கடன் நிலுவைத் தொகையால் ஜப்தி செய்யப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
“ கடந்த சில நாட்களாகவே சரவணா ஸ்டோர்ஸ் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. நிர்வாகம் தலையிட்டு எல்லா சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “