தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, ஒரு நாள் போட்டி தொடரையும் இழந்திருக்கிறது இந்திய அணி.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 71 பந்துகளில் அதிரடியாக 85 ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 48.1 ஓவர்களிலேயே எளிதாக இலக்கை அடைந்து தொடரையும் தன் வசப்படுத்தியது.
“ ஒரு நல்ல பிளேயிங் 11-யை இந்திய அணி வைத்திருந்த போதும் கூட எந்த ஒரு உத்வேகமும் இல்லாமல் விளையாடியதே தோல்விக்கு காரணமாய் அமைந்ததாக கூறப்படுகிறது “