Tamizhum Saraswathiyum Today Episode | 28.01.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, மருதாணி வைத்த தம்பதிகளுக்கு காதல் அதிகமாக இருந்தால் அதிகமாக சிவக்கும் என்று ஈஸ்வரி கூறினார். சந்திரகலா அதெப்படி நடக்கும்? ரசாயனம் கலந்தால் தானாக சேவக்க போகிறது. இதெல்லாம் சுத்த முட்டாள்தனம் என்றார். இதனால் ஈஸ்வரி கோபம் கொண்டார். இடையில் வசுந்தரா நுழைந்து இது ஒரு விளையாட்டாக நடக்கும் ஒன்று, இதற்கு ஏன் இவளோ பேச்சு என்று தன் அம்மாவை அமைதி படுத்தினார். ஆனால் சரஸ்வதி இதை உண்மையில் ஒரு சவாலாக எடுத்துக்கொள்வதாக கூறினார். என் மீதும் தமிழ் மீதும் உள்ள நம்பிக்கை காதல் கண்டிப்பாக மருதாணி சிவந்து காட்டிக்கொடுக்கும் என்று தைரியமாக பேசினார். இதை பார்த்த சொக்கலிங்கம் பூரித்துப்போனார். தன் மகளா இவளோ தெளிவாய், இவளோ தைரியமாக பேசினார் என்று பெருமையாக நினைத்தார். பின் அனைவரும் மருதாணி வைத்துக்கொண்டார்கள். நமச்சி தமிழ் சரஸ்வதி இருவருக்கும் ஒரு சின்ன போட்டி அறிவித்தார். இருவரிடமும் கேள்விகள் கேட்கப்படும் , இருவரும் ஒரே பதில் சொல்லி தங்களுக்குள் இருக்கும் புரிதலை வெளிபடுதும்படி செய்ய வேண்டும் என்று கூறினார். பின் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்துக்கும் இருவருமே ஒரே பதிலை சொல்லி அசத்தினார்கள். பின் குடும்பத்தில் அனைவருக்கும் ஒரு போட்டி போல் வசுந்தரா மற்றும் நமச்சி நடத்தினார்கள். அதில் யாருக்கு என்ன சீட்டு வருகிறதோ அதை செய்யவேண்டும் என்பது விதிமுறை. அதன்படி முதலில் கோதைக்கு பாட்டு பாடும்படி எழுதி இருந்தது. கோதையும் பாட்டு பாடி அசத்தினார். அடுத்து என்ன நடந்தது? யாருக்கு என்ன சீட்டு வந்தது? தெரிந்துகொள்ள காணொளியை பார்க்க…

About Author