சில நாட்களாகவே காஷ்மீரில் தினசரி கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில் அங்கு 64 மணி நேர முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.35 லட்சமாக ஆகி இருக்கும் நிலையில், காஷ்மீரிலும் தினசரி கொரோனா பாதிப்பு நான்காயிரத்தை தொட்டு இருக்கிறது. இதன் காரணமாக அங்கு 64 மணி நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதன் விளைவாக சாலைகள், தெருக்கள் எல்லாம் வெறிச்சோடி கிடக்கின்றன.
“ கேரளாவிலும் கொரோனா தொற்று ஐம்பதாயிரத்தை கடந்து இருக்கும் நிலையில் அங்கும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது “