ஆஸ்திரேலியன் ஓபன் | ’3-2 என்ற செட் கணக்கில் மெட்வதேவை வென்றார் ரபேல் நடால்’
Australian Open 2022 Rafael Nadal Beat Medvedev
ஆஸ்திரேலியன் ஓபனின் இறுதிப் போட்டியில் டேனில் மெட்வதேவை வென்றார் ரபேல் நடால்.
முதல் இரண்டு செட்களை டேனில் மெட்வதேவ் கைப்பற்றிய போதும், அதற்கு அடுத்து சுதாரித்து ஆடிய ரபேல் நடால் இறுதியில் 3-2 என்ற கணக்கில் மெட்வதேவை தோற்கடித்து தனது இரண்டாவது ஆஸ்திரேலியன் ஓபனை கைப்பற்றினார். கிட்ட தட்ட 5 மணி நேரம் 24 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்தது இந்த போட்டி.
“ ஒரு கட்டத்தில் மெட்வதேவ் வெல்வார் என்றே அனைவரும் நினைத்துக் கொண்டு இருந்த அந்த களத்தில் திடீரென அனலாக விளையாடி, ஆட்டத்தை இழுத்து தன் பக்கம் கொண்டு வந்தார் ரபேல் நடால் “