இணைய வழியில் பயில முடியாத மாணவர்களுக்காக டிவியின் வழியாக 200 கல்வி சேனல்கள் – பட்ஜெட்
இணைய சேவை இல்லாத மாணவர்களுக்காக புதியதாக 200 கல்வி சேனல்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
பெருந்தொற்றினால் இணையவழி கல்வியே பெரும்பாலும் நடைபெற்று வருகிறது. இணைய சேவை இல்லாத பெரும்பாலான கிராமப்புற மாணவர்களால் ஆன்லைன் கல்வியை தொடர முடியவில்லை. இதை கருத்தில் கொண்டு ’ஒரு வகுப்பு ஒரு தொலைக்காட்சி’ திட்டத்தின் கீழ் 200 கல்வி சேனல்கள் அறிமுகப்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
“ இத்திட்டத்தின் மூலம் இனி 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் இணையம் இல்லாமல் டிவியிலும் அவர்களது கல்வியை தொடரலாம் “