தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று குறியாக இருந்தார். அதனால் சபையில் வைத்து அனைவர் முன்னிலையிலும் தமிழ் சரஸ்வதியின் காதல் விஷயம் பற்றி பேச ஆரம்பித்தார். சரஸ்வதியை எத்தனை முறை தமிழ் காப்பாற்றி உள்ளார். எத்தனை முறை வெளியில் சந்தித்து பேசினார்கள். குடும்பத்தில் யாருக்கெல்லாம் இந்த விஷயம் தெரியும் என்று அத்தனையும் கூறினார். இதை கேட்ட சரஸ்வதி தமிழ் மற்றும் குடும்பத்தில் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். கோதை இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் கோதை தனக்கு இந்த விஷயங்கள் அனைத்தும் முன்னதாகவே தெரியும் என்று கூறினார். நடேசன் தனக்கு தெரிந்த உண்மையை மறைக்கத்தான் நினைத்தேன் ஆனால் என்னால் மறைக்க முடியவில்லை என்றார். இதை கேட்ட தமிழ் சரஸ்வதி இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார்கள். பின் இருவரும் கோதை காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்கள். கோதைக்கு வருத்தம் இருந்தாலும், நான் இந்த திருமணத்தை தானாகவே ஏற்பாடு செய்தது போல் தான் செய்துள்ளேன். அதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று கூறினார். ஆனால் இதை விட பெரிய பொய் ஒன்றை சொல்லி வைத்து இருக்கோமே என்று தமிழும் சரஸ்வதியும் குற்ற உணர்ச்சியில் துடித்தார்கள். பின் அடுத்து நடக்க வேண்டிய சம்பர்தாயங்கள், சடங்குகள் அனைத்தும் செய்தார்கள். தமிழ் சரஸ்வதியின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. சந்திரகலா தான் எதிர்பார்த்தது போல் எதுவும் நடக்கவில்லையே என்று முறைதார். ஆதி நாம் நினைத்தது நடக்கவில்லை என்று சந்திறவிடம் புலம்பினார். ஆனால் அவர் வேறு ஒரு திட்டம் வைத்து இருப்பதாக கூறினார். அடுத்து என்ன திட்டம் அது? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….