தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் அனைவரும் மணமக்களை வாழ்த்தினார்கள். பின் கோதை மற்றும் சொக்கலிங்கம் வாசுகி அனைவரிடமும் கிளம்புவதாக கூறினார்கள். இந்த குடும்பத்தால் தான் தமிழ் உயிர் காப்பாற்ற பட்டது என்று மேடையில் கூறினார் கோதை. சந்திரகலா இதையெல்லாம் பார்த்து எரிச்சல் அடைந்தார். சொக்கலிங்கம் தனியாக இருக்கும் நேரம், கோதை சில நேரம் அவரை கவனிக்காத போதும் கோதையை பற்றி தவறாக சித்தரித்து பேசினார். இதை ஒரு கட்டத்தில் சொக்கலிங்கமும் நம்ப ஆரம்பித்தார். சொக்கலிங்கம் விருந்தினர்களை கவனிக்காத மாதிரி கோதை தன் சொந்தங்களை மட்டுமே கவனித்த மாதிரி நடந்துகொண்டார். இதனால் சொக்கலிங்கம் கோதையை தவறாக நினைத்தார். சற்று நேரத்தில் மினிஸ்டர் அங்கு வந்தார். அவரை அனைவரும் வரவேற்றார்கள். ஆனால் சொக்கலிங்கம் ஒதுங்கியே இருந்தார். கோதை மேடையில் இருந்து சொக்கலிங்கம் வாசுகியை அழைத்து அவர்களை அறிமுகப்படுத்தினார். இதனால் சொக்கலிங்கம் மனதில் இருந்த வருத்தம் மறைந்தது. சந்திரகலா ஒரு பெரிய திட்டம் தீட்டினார். இந்த திருமணத்தை நிறுத்த ஷ்யாமை வைத்து ஒரு பெரிய சதி செய்தார். அப்படி என்ன திட்டம் அது? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…