Tamizhum Saraswathiyum Today Episode | 07.02.2022 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சாப்பாடு சாப்பிட்டு கண்ணன் ஐஷ்வர்யா மற்றும் மூர்த்தி வராததை நினைத்து வருந்தினார்கள். அதை கோதை இடமும் தனம் எதார்த்தமாக கூறினார். பின்னர் ஊருக்கு கிளம்ப வேண்டும் என்று சொக்கலிங்கம் மற்றும் கோதை இடம் சொல்ல, காலையில் முகூர்த்தம் முடிந்த பின் கிளம்புமாரு கேட்டுக்கொண்டார்கள். ஆனால் தனம் கிளம்ப வேண்டும் என்று கூறினார். பின் கோதை தன் ஒரு மகன்களையும் அழைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் போல் அண்ணன் தம்பிகள் ஒத்துமையாக இருக்கவேண்டும் என்று கூறினார். கார்த்திக் வசுந்தரா, தமிழ் சரஸ்வதி ஜோடியும் அதை கேட்டு கண்டிப்பாக இருப்போம் என்று கூறினார்கள். இரவு அனைவரும் தூங்கிய பின்னும் சரஸ்வதிக்கு தூக்கம் வரவில்லை. பதட்டமாக இருந்தார். இதனால் தமிழுக்கு அழைத்து பேசினார். நான் படிக்காத விஷயத்தை தெரிந்து இந்த திருமணம் நின்றுவிட்டால் என்ன செய்வது? எப்படி சமாளிப்பது? சந்திரகலா இந்த திருமணத்தை நடத்த விடுவாரா? என்று புலம்பினார். தமிழும் அவருக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். அடுத்த நாள் கீதா தனக்கு எடுத்த கொரோனா டெஸ்டில் எந்த பிரச்னையும் இருக்க கூடாது என்று வேண்டினார். அதன்படியே அவருக்கு கொரோனா இல்லை என்று ரிபோட் வந்தது. உடனே அங்கு இருந்தவர்களை ஏமாற்றி மண்டபத்திற்கு கிளம்பினார். இது அறிந்த நமச்சி உடனே அவரை தேடி வந்து அவர் இருக்கும் ஆட்டோவை கண்டும் பிடித்தார். பின் அவர் கைகளை கட்டி காருக்குள் போட்டு மண்டப வாசலில் நிறுத்தி பூட்டி வைத்து பின் தன் வேலையை செய்ய கிளம்பினார். தமிழ் மைரும் சரஸ்வதி இருவரும் மணவறையில் வந்து அமர்ந்தார்கள். அடுத்து என்ன நடந்தது? சந்திரகலா என்ன திட்டம் போட்டார்? காணொளியை பார்க்க…