தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதியின் திருமணத்தை பார்க்க அனைவரும் ஆவலாக இருந்த நேரம். அப்போது சந்திரகலா மட்டும் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று காத்திருந்தார். தாலி கட்டும் நேரம் பார்த்து ஷ்யாமை வர வைக்கலாம் என்று காத்திருந்தார். இதற்கிடையில் கீதா, அந்த அடைபட்ட காருக்குள் இருந்த ஒரு ஃபோனில் சந்திரகலாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். கீதா தன்னை ஒரு வண்டியில் அடுத்து வைத்து இருப்பதாகவும், மண்டபத்துக்கு வெளியே இருப்பதாகவும், சரஸ்வதி +2 வே இன்னும் தாண்டவில்லை என்றும் அதில் கூறியிருந்தார். அதை பார்த்த சந்திரகலா இந்த ஒரு காரணம் போதும் இந்த திருமணத்தை நிறுத்த என்று நினைத்தார். பின் கீதாவை காப்பாற்றி மண்டபத்திற்கு அழைத்து வந்தார். திருமணத்தை நிறுத்த முயற்சி செய்தார் ஆனால் அதற்குள் தமிழ் தாலியை கட்டி விட்டார். பின் இதுவும் நல்லதுக்கு தான், கோதையை அசிங்க படுத்த இது ஒரு வாய்ப்பு என்று நினைத்தார். திருமணம் முடிந்து அனைவரும் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு இருந்த தமிழ் சரஸ்வதியை ஆசிர்வாதம் செய்ய கோதை சந்திரகலாவை அழைத்தார். ஆனால் சந்திரகலா அப்போது உண்மை அனைத்தையும் போட்டு உடைத்தார். அதை கேட்ட கோதைக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அதை நம்பலாமா வேண்டாமா என்ற ஒரு பதட்டம் இருந்தது. தமிழ் சரஸ்வதி மற்றும் அவரது குடும்பம் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…