தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியின் பாட்டி காலையில் இருந்து சாப்பிடாமல், மாத்திரை போடாமல் இருந்ததால் அவருக்கு மயக்கம் படபடப்பு அதிகரித்தது. அதை பார்த்த குடும்பத்தினர் அவருக்கு ஏதாவது சாப்பாடு வாங்கி கொடுத்து மாத்திரையை சாப்பிட வைக்க வேண்டும் என்று கிளம்பினார்கள். சரஸ்வதி தான் ஒரு ராசி கெட்டவள், தன்னால் யாருக்கும் எந்த நல்லதும் நடக்காது என்று கூறினார். தனக்கு எந்த பாசமும் கிடைக்காது அப்படியே கிடைத்தாலும் அது தாங்காது. என் மீது பாசம் வைத்தாவே பெரிய பிரச்சினை தான் என்று கூறினார். இதை கேட்ட தமிழ் சரஸ்வதிக்கு ஆறுதல் கூறினார். அப்படியெல்லாம் நினைக்க வேண்டாம் என்று கூறினார். அவர் ஆறுதல் சொல்வதை கார்த்திக் பார்த்து அவர்கள் காதலிப்பதாக தவறாக நினைத்தார். இதை தெரிந்துகொண்ட சந்திரகலா தன் பங்குக்கு எதையாவது செய்து பிரச்சனையை பெரிதாக்க நினைத்தார். அதனால் கோதை மீதும் அவர் குடும்பத்தின் மீதும் அக்கறையாக இருப்பது போல் நடந்துகொண்டார். தனக்கு தெரிந்த டாக்டரை வரவைத்து கொதைக்கு மருத்துவம் பார்க்கும்படி செய்தார். தமிழ் சரஸ்வதி மற்றும் அவரது குடும்பம் அனைவரையும் கோதைக்கு செய்த துரோகத்தை மீண்டும் சொல்லி காமித்தார். அவர்கள் இங்கு இருந்தால் கோதைக்கு மீண்டும் எதாவது ஆகி விடும் என்று பயம் காட்டினார்.தானும் வசுந்தரா திருமணத்தில் பொய் சொன்னேன் ஆனால் அது நம்ம வீட்டுக்குள் முடிந்துவிட்டது. ஆனால் சரஸ்வதியின் குடும்பம் பெரிய பொய் சொல்லி, அதை சபையில் வைத்து கோதைக்கு இப்படி ஒரு நிலமை வர காரணம் என்று தனக்கு சாதகமாக நிலமையை மாற்றினார். கார்த்திக் மற்றும் நடேசன் இவர் பொடும் நாடகத்தை நம்பி மனம் மாறினார்கள். கோதையை பார்த்த மருத்துவர் 8 மணி நேரத்தில் கண் முளைத்தால் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…