ஈரமான ரோஜாவே தொடரில் இன்று, காவ்யா மற்றும் வராது குடும்பம் இருக்கும் கடைக்கு ஜீவா வந்து கலாட்டா செய்து விளையாட்டாக பேசினார். பின் அவர்களை துணி எடுக்க சொல்லி விட்டு காவ்யா தனியாக ஜீவாவை பார்க்க வந்தார். அவர்களின் காதல் விளையாட்டுகள், செல்ல சண்டைகள் என்று அனைத்தும் நடந்தது. பின் ஜீவாவின் ஃபோனை காவ்யா வாங்கி வைத்து வம்பிழித்தார். பார்த்திபனை தன் வலையில் சிக்க வைக்க மீரா அவருக்கு பிடித்ததை போல் சேலை கட்டி தலை நிறைய மல்லிகை பூ வைத்து வந்தார். அதை பார்த்த பார்த்திபன் ஆச்சர்யமாக பார்த்தார். பின் தனக்கு அடுத்த வாரம் தனக்கு நிச்சயதார்த்தம் என்று கூறினார். அதை கேட்டதும் மீரா அதிர்ச்சி அடைந்தார். ரம்யா இரண்டு நாளாக சாப்பிடாமல் மயக்கம் போட்டு விழுந்தார். அதை பார்த்த தேவி பதரிப்போய் அவரை மயக்கம் தெளியவைத்தார். பின் ரம்யா தன் மனதை யாருமே புரிந்துகொள்ளவில்லை, நான் பார்த்திபன் மாமாவை காதலிப்பதை எதற்கு கண்டுகொள்ளவில்லை என்று புலம்பினார். பின் தேவி கோவத்தில் அருணாச்சலத்திடம் பேசினார். தன் மகள் ரெண்டு நாளாக சாப்பிடவில்லை என்று கோவமாக கூறினார். அதற்கு அவர் என்ன செய்தார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..