தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தொழிற்சாலையில் நடக்கும் பிரச்சனையை தான் சரி செய்வதாக கூறி கார்த்திக்கை அழைத்துக்கொண்டு அந்த இடத்திற்கு சென்றார் சந்திரகலா. அங்கு சென்று தொழிலாளர்களிடம் பணிவோடு பேசாமல், தன் அதிகாரத்தை காட்டினார். அவர்களுக்கு 30 நிமிடம் மட்டுமே நேரம், அதற்குள் வேலைக்கு செல்லவில்லை என்றால் அவர்கள் வேலைகள் பறிக்கப்படும் என்று மிரட்டும் தோரணையில் பேசினார். பின் அவர்கள் பேசி முடிவு எடுக்கட்டும் என்று அமர்ந்து இருந்தார். அந்த நேரத்தில் தொலைபேசியில் அழைத்து தொழிலாளர்கள் இடம் பேசினார் தமிழ். அவர் படிவுடன், நடக்கும் விஷயங்களை பொறுமையாக எடுத்து கூறினார். அம்மாவுக்கு இப்படி ஒரு நிலையில் இருக்கும்போது தங்களுக்கு நீங்கள் தான் ஆதரவாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனால் மனம் மாறி அனைவரும் வேலைக்கு சென்றார்கள். ஆனால் சந்திரகலா தன் மிரட்டலுக்கு பயந்து தான் அவர்கள் வேலைக்கு மீண்டும் வந்தது பொள் எண்ணினார். கார்த்திக்கும் சந்திரகலா பேசியதால் தான் பிரச்சனை சுமூகமாக முடிந்தது என்று நம்பினார். சந்திரகலா செய்தது தான் சரி என்று எண்ணினார். பின் மருத்துவமனையில் நடேசனிடம் நடந்ததை கூறினார் கார்த்திக். சந்திரகலா தான் உதவி செய்தது போல் அவரை கை கூப்பி நன்றி சொன்னார். நமச்சி தமிழ் பேசியதால் தான் பிரச்சனை சுமூகமாக முடிந்தது என்று அவர்களுக்கு சொல்ல முயற்சித்தார். ஆனால் அவரை கார்த்திக் பேச விடவில்லை. சற்று நேரத்தில் கோதை கண் விழித்து விட்டார் என்று தெரிந்ததும் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளே சென்றார்கள். தமிழ் சரஸ்வதி இருவரும் கோதையை பார்க்க கிளம்பும்போது சொக்கலிங்கம் தடுத்தார். இப்போது பார்க்க வேண்டாம், கொஞ்ச நேரம் போகட்டும் என்றார். ஆனால் அதை கேட்காமல் தமிழ் உடனே பார்க்க கிளம்பினார். கண் விழுது பார்த்த கோதை அனைவரையும் பார்த்து பாதி மயக்கத்தில் இருந்தார். தமிழ் சரஸ்வதி இருவரும் அங்கு வந்து தங்களை மன்னிக்குமாறு கேட்டார்கள். அதற்கு கோதை என்ன பதிலளித்தார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….