Tamizhum Saraswathiyum Today Episode | 17.02.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதையின் ஆபரேஷனுக்கு இரத்தம் தேவைப்படும் என்பதால் அனைவரும் பதட்டமாக இருந்தார்கள். தமிழ் தனக்கும் அதே இரத்த வகை தான் என்று முன் வந்தார். ஆனால் சந்திரகலா தன்னால் தான் இந்த ஆபரேஷன் நடந்ததாக இருக்கவேண்டும் என்பதால் அதை கொடுக்க விடாத பாடி செய்தார். நடேசனும் அவர் பேச்சை கேட்டு தமிழ் இரத்தத்தை வேண்டாம் என்று ஒதுக்கினார். தமிழ் காலில் விழுந்து கெஞ்சியும் அவரை மதிக்கவில்லை நடேசன். பின் நமச்சி பின் வாசல் வழியாக சென்று டாக்டரை பார்க்கலாம் என்று கூறினார். பின் டாக்டரை பார்த்து தன் இரத்த வகை அம்மாவுடையது தான் என்று கூறினார். உடனே அவர்களும் இரத்தத்தை அவரிடம் இருந்து பெற்றார்கள். ஆனால் இதை குடும்ப்ததில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கூறினார் தமிழ். அந்த டாக்டரும் அதற்கு ஒப்புக்கொண்டார். அதற்கு பின் கோதையின் ஆபரேஷன் நடந்தது முடிந்தது. வெற்றிகரமாக முடிந்தது என்று டாக்டர் குடும்பத்தாரிடம் கூறினார்கள். சந்திரகலா அந்த நேரத்தில் கூட அந்த டாக்டரை புகழ்வது போல், தான் கூப்பிட்ட ஒரே காரணத்திற்காக வந்ததற்கு நன்றி சொல்வது பொல் பேசினார். ஆனால் உண்மையில் தன்னால் தான் இந்த ஆபரேஷன் நடந்தது என்பது போல் குடும்பத்தில் அனைவரையும் நம்ப வைத்தார். இரத்தமும் தானே இறங்கி வந்து பேசியதால் தான் உடனே கிடைத்தது என்பது போல் பேசினார். தமிழ் தன் அம்மா உணமடைந்தால் போதும் என்று இருந்தார். சரஸ்வதி கோவிலில் வேண்டிக்கொண்டு இருந்தார். கோதைக்கு எந்த பிரச்சனையும் வர கூடாது என்று வேண்டி 1008 முறை பிரகாரத்தை சுற்றி வருவதாக வேண்டினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author