கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி குணமடைந்தவர்களுக்கு பக்க விளைவாக மனநல நோய் வருவதாக ஆய்வில் தெரிய வந்து இருக்கிறது.
கொரோனா என்னும் சூழல் மூன்று வருடங்களைக் கடந்து இன்னமும் ஓயாத நிலையில் ஒரு ஆய்வறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்துவதாய் இருக்கிறது. அதாவது கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி குணமடைந்த சிலர் மனநலநோயால் அவதிப்பட்டு வருவதாக ஒரு ஆய்வறிக்கையை மருத்துவ வல்லுநர்கள் வெளியிட்டு இருக்கின்றனர்.
“ தூக்கமின்மை, சோர்வு, மறதி, உளறல் போன்ற தன்னிச்சை செயல்பாடுகள் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களிடம் 2 வருடங்கள் கழித்து தென்பட்டதாக மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர் “