ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ரம்யா செய்த காரியத்தால் குடும்பத்தில் அனைவரும் பதட்டத்தில் வந்தார்கள். ரம்யாவை சமாதானம் செய்ய முயற்சித்தார்கள். ஆனால் ரம்யா யார் பேச்சையும் கேட்பதாக இல்லை. தன் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார். அருணாச்சலம் இது போல் இனி செய்ய வேண்டாம் என்று கூறினார். ஆனால் தேவி உடனே இந்த திருமணத்தை நிறுத்தி ரம்யா பார்த்திபன் திருமணத்தை நடத்த சொன்னார். அது தன் கையில் இல்லை, பார்த்திபன் மனம் மாறினால் செய்வேன் என்று கூறினார். தேவி துரையை அழைத்து தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. என் மகள் ரம்யா பார்த்திபனை விரும்புகிறாள். அதனால் நீயே இந்த திருமணத்தை நிறுத்தும்படி கூறினார். நீயே நிறுத்தினால் பார்த்திபன் என் மகளை விரும்புவதாக ஒத்துக்கொள்வான் என்று கூறினார். இதை கேட்ட துரை, தன்னால் எதுவும் செய்ய முடியாது இது வாழ போகும் இருவரும் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு தேவி அப்போ என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்வேன் என்று மிரட்டிசென்றார். பார்த்திபன் பிரியாவை அழைத்து பேசினார். தான் நலமாக இருப்பதாக கூறினார். அவர் குரலை கேட்ட பின் தான் பிரியா மனம் நிம்மதி அடைந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க ….