AK 63 | ‘மீண்டும் இணையும் ’பில்லா’ திரைப்படத்தின் கூட்டணி’

AK 63 Confirmed With Vishnu Vardhan

அஜித் குமார் அவர்களின் 63 ஆவது படத்திற்காக இயக்குநர் விஷ்ணு வர்தன் உடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. துணிவு வெளியாக இருக்கிறது, இன்னொரு பக்கம் விக்னேஷ் சிவன் உடன் AK 62 படப்பிடிப்பில் இருக்கிறது. இந்த நிலையில் AK 63 திரைப்படத்திற்காக நடிகர் அஜித் அவர்களை விஷ்ணுவர்தன் அணுகி இருப்பதாக தெரிகிறது. முன்னதாக சொன்னது போல பீரியடிக் பிலிம் அல்லாமல் ஆரம்பம், பில்லா போல ஒரு அதிரடி படமாக தான் இருக்கும் எனவும் கருத்து … Read more

மிரட்டும் ’லத்தி’ ட்ரெயிலர், அதிரடியில் மிரட்டிய நடிகர் விஷால்!

Laththi Movie Trailer Is Out

இயக்குநர் வினோத் குமார் மற்றும் நடிகர் விஷால் இணையும் ‘லத்தி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ரானா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினோத் குமார் அவர்களின் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், நடிகர் விஷால், சுனைனா மற்றும் பலர் நடிக்கும் ‘லத்தி’ திரைப்படத்தின் அதிரடியான ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. கான்ஸ்டபிள் வெர்சஸ் ரவுடிகள் என படம் அதகளம் காட்டும் என நினைக்கிறேன். “ ட்ரெயிலர் பார்க்க பிராமிஸ்சிங்காக தான் இருக்கிறது. படம் டிசம்பர் … Read more

அதிகாரப்பூர்வமாக அமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்!

Minister Udhayanidhi Stalin Idamporul

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் சேப்பாக்கம் தொகுதியின் எம் எல் ஏ-வாக அறியப்படும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக வருகின்ற டிசம்பர் 14 அன்று ஆளுநர் மாளிகையில் அதிகாரப்பூர்வமாக பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ இது குறித்து முரண்பட்ட கருத்துக்கள் கட்சியிலும், பொதுவெளியிலும் இருந்தாலும் கூட தைரியமாக முடிவெடுத்து அறிக்கை விடுத்து இருக்கிறது ஆளும் … Read more

ஜெய் பீம் இயக்குநருடன் மீண்டும் இணையும் நடிகர் சூர்யா!

Actor Suriya In Jai Bhim Idamporul

ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் அவர்களுடன் நடிகர் சூர்யா மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் அவர்களின் இணைவில் உருவான ‘ஜெய் பீம்’ திரைப்படம் பொது தளத்தில் நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில், மீண்டும் இந்த காம்போ சாத்தியமாக இருக்கிறது. மீண்டும் ஒரு உண்மைக் கதையை எடுத்துக்கொண்டு அதை இந்த காம்போ படமாக்க திட்டமிட்டு இருக்கிறதாம். “ ஹரி, சுதா கொங்கரா, ஞானவேல் என்று வரிசையாக சூர்யாவிற்கு … Read more

தளபதி 67-யில் களம் இறங்கும் பெரும் நடிகர்கள் படை!

Thalapathy 67 Big Crew Alert Idamporul

நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘தளபதி 67’ திரைப்படத்தில் பெரும் நடிகர்கள் பெயரெல்லாம் அடிபடுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘தளபதி 67’ திரைப்படத்தில் சஞ்சய் தத், கமல் ஹாசன், சூர்யா, பஹாத் பசில் மற்றும் கார்த்தியும் இணைய இருப்பதாகவும், இது நிச்சயம் லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ் தான் என்ற தகவலும் நம்ப தகுந்த வட்டாரங்களிடம் இருந்து கிடைத்து இருக்கிறது. “ விக்ரம் திரைப்படத்தில் இருந்தே மீளாத … Read more

அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு, தமிழகத்தில் மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

Rain Continuing In TN Idamporul

அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நீடிப்பதால் தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் விடுத்து இருக்கிறது. மாண்டஸ் புயலின் தாக்கத்தால் தொடர்ந்து மழை சென்னை உள்ளிய்ய வட தமிழகத்தின் பகுதிகளில் பெய்து வரும் நிலையில், அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மழை தொடர்ந்து நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் விடுத்து இருக்கிறது. “ டிசம்பர் என்றாலே சென்னை பீதியில் கிடக்கும் … Read more

சினிமாவில் பல யுகங்கள் கண்ட தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!

Happy 72th Birthday Thalaivar Rajini Kanth Idamporul

சினிமாவில் பல யுகங்கள் கடந்து வந்து, பல வெற்றிகளை குவித்து இன்னமும் நிற்காத குதிரையாய் வலம் வரும் நடிகர் ரஜினி காந்த் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். கருப்பு வெள்ளை திரைப்படத்தில் துவங்கியவர், 3டி திரைப்படம் வரை நடித்தாயிற்று, சினிமா மாறிக்கொண்டே தான் இருக்கிறது. ஆனால் இவரின் ஸ்டைலும் அர்ப்பணிப்பும் இவருக்கான கிரேஸ்சும் ஒரு போதும் மாறியதில்லை. இன்று 72 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் ரஜினிகாந்த் அவர்களுக்கு இடம்பொருள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள். “ பிறந்தநாள் அப்டேட்டாக … Read more

ஒட்டு மொத்தமாக கால்பந்து ஆட்டத்திற்கு ஓய்வு கொடுக்க நினைக்கும் ரொனால்டோ!

Cristiano Ronaldo HD Wallpaper Idamporul

காலிறுதியில் மொரோக்கோவுடனான தோல்வியினால், ரொனோல்டோ கால்பந்து ஆட்டத்திற்கு ஒட்டு மொத்தமாக ஓய்வு கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மொரோக்கோவுடனான காலிறுதி ஆட்டத்தில் போர்ச்சுக்கல் தோல்வியுடன் வெளியேறியது மட்டும் அல்லாமல், கடைசி இரண்டு ஆட்டங்களில் ரொனோல்டோவை பெஞ்சில் அமர்த்தியது அவரையும் சரி அவரது ரசிகர்களையும் சரி மிகவும் காயப்படுத்தியதால் ரொனால்டோ ஒட்டு மொத்தமாக கால்பந்திற்கு முழுக்கு போட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ இந்த கால்பந்து உலககோப்பையோடு பெரும்பாலான கால்பந்து ஜாம்பவான்கள் ஒட்டு மொத்தமாக கால்பந்திற்கு … Read more

மாண்டஸ் புயலின் தாக்கம், 8 மாவட்டங்களுக்கு அதீத கனமழை எச்சரிக்கை!

Heavy Rain Alert For 8 Districts In TN Idamporul

மாண்டஸ் புயலின் தாக்கத்தால் இன்று 8 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்து இருக்கிறது. மாண்டஸ் புயலின் தாக்கத்தால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இன்று 12-20 செ.மீ அளவிற்கு அதீத கனமழை பெய்யக்கூடும் என்பதால் பேரிடர் மேலாண்மை குழுக்களை தயார்நிலையில் வைக்க சொல்லி தமிழக அரசுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. “ சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், சேலம், ஈரோடு, … Read more

பொருநை நதி என பெயர் மாற்றம் செய்யப்படுமா தாமிரபரணி?

Thamirabarani River Wallpaper Idamporul

தாமிரபரணி என்ற பெயரை பொருநை நதி என பெயர் மாற்றம் செய்ய சொல்லி போடப்பட்ட வழக்கில் தமிழக அரசை முடிவெடுக்க சொல்லி இருக்கிறது உயர் நீதிமன்றம். திருநெல்வேலி, தூத்துக்குடி சுற்று வட்டாரங்களில் பெரும் பயனை தரும் வற்றாத நதியான தாமிரபரணியின் பெயர் வடமொழி சொல் என்றும், இலக்கியங்களில் இருக்கும் பெயரான பொருநை என்ற பெயரையே நதிக்கு பயன்படுத்த வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழக அரசையே முடிவெடுக்க சொல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. பெயர் மாற்றத்திற்கென ஒரு … Read more