TATA IPL 2022 | Match No 14 | ‘இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது மும்பை’

TATA IPL 2022 Match 14 Kolkata Facing Mumbai Today

டாடா ஐபிஎல் 2022-யின் 14 ஆவது போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது மும்பை அணி. இன்று நடக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் பதிநான்காவது போட்டியில், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி, ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. புனே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ இதுவரை புள்ளிக்கணக்கையே துவங்காதா முன்னாள் சாம்பியன் மும்பை இந்த போட்டியிலாவது வென்று தனது புள்ளிக்கணக்கை துவங்குமா என்பதை … Read more

விரைவில் ரன்பீர் கபூரை கைப்பிடிக்க இருக்கும் அலியா பட்!

Alia Bhatt And Ranbir Kapoor

நீண்ட நாட்களாக காதல் செய்து கொண்டு வருவதாக சொல்லப்பட்ட ரன்பீர் – அலியா ஜோடி விரைவில் திருமணம் முடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாலிவுட் பிரபலங்களான ரன்பீர் கபூர் மற்றும் அலியா பட் நீண்ட நாட்களாவே காதல் செய்து வந்தனர். பொதுவெளியில் காதலை ஒப்புக் கொண்டு இருந்தாலும் அவர்களின் திருமணம் பற்றிய பேச்சு இழுபறியிலேயே இருந்தது. இந்நிலையில் வரும் ஏப்ரல் 17 அன்று இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ … Read more

தலைவர் 169 | ‘தலைவர்-நெல்சன் கூட்டணியின் இணைகிறாரா சிவகார்த்திகேயன்?’

Thalaivar 169 Sivakarthikeyan Join Hands With RajiniKanth For Nelson Directorial

தலைவர் 169 திரைப்படத்திற்காக, தலைவருடன் நடிகர் சிவகார்த்திகேயனும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் திலிப்குமார் அவர்களின் இயக்கத்தில், ரஜினிகாந்த் அவர்கள் நடிக்க இருக்கும் பெயரிடப்படாத அந்த திரைப்படத்தில், சிவகார்த்திகேயனும் இணைய இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது. “ இரண்டு பெரிய ஸ்டார்களை வைத்து இயக்கும் திரைப்படம் சமீப காலங்களில் சினிமாவில் சாதாரணமாகி வரும் நிலையில் கோலிவுட்டிலும் அந்த நிலை வந்திருப்பது சினிமாவின் ஒரு நேர்மறையான … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 1,086 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 06 04 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,086 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,086 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 71 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,21,487 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 11,871 ஆக … Read more

TATA IPL 2022 | Match No 13 | ‘ஷபாஸ், தினேஷ் கார்த்திக்கின் அதிரடியில் வீழ்ந்தது ராஜஸ்தான்’

TATA IPL 2022 Match 13 RR VS RCB Bangalore Won By 4 Wickets

டாடா ஐபிஎல் 2022-யின் பதிமூன்றாவது போட்டியில் ராஜஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய பெங்களுரு அணி 87-5 விக்கெட்டுக்களை இழந்த போதும் ஷபாஸ் 45(26) மற்றும் தினேஷ் கார்த்திக் 44(23) அதிரடியாக விளையாடி பெங்களுரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தனர். “ கடைசி வரை களத்தில் நின்று … Read more

தளபதி 66 படத்தில் இணைந்து இருக்கும் மாஸ்சான இசையமைப்பாளர்!

Official Music Director Thaman Join With Thalapathy 66

தளபதி 66 படத்திற்கு யார் இசையமைப்பாளர் என்று ரசிகர்கள் ஏங்கிக் கொண்டு இருந்த வேளையில் படக்குழு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வம்சி பைடிபள்ளி இணையும் தளபதி 66 படத்திற்கு ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், இசையமைப்பாளர் யாராக இருக்கும் என்று ரசிகர்கள் சிந்தித்து கொண்டு இருந்த வேளையில் இசையமைப்பாளர் தமன் தற்போது இணைக்கப்பட்டு இருக்கிறார். “ ஒரே நாளில் இரண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானதால் … Read more

தேசிய ஈர்ப்பாளனியான நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு இன்று பிறந்தநாள்!

National Crush Rashmika Celebrating Birthday Today

ரசிகர்களால் தேசிய ஈர்ப்பாளனியாக கொண்டாடப்படும் ராஷ்மிகா மந்தனாவிற்கு இன்று பிறந்தநாள். கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் ராஷ்மிகா ரசிகர்களை தன் பக்கம் இழுத்து, அவர்கள் அவரை ’தேசிய ஈர்ப்பாளனி’ என்று கொண்டாடும் அளவிற்கு அவர் வளர்ந்து இருக்கிறார். தற்போது புஷ்பா அடுத்ததாக தளபதி 66 என்று தென் இந்தியாவில் தவிர்க்க முடியாத நடிகையாஅ வளர்ந்து நிற்கிறார் ராஷ்மிகா. “ அழகு, பாவனை என்று ஒவ்வொன்றிலும் ரசிகர்களை ஆழ்ந்த மயக்கத்தில் ஆழ்த்தும் தேசிய ஈர்ப்பாளனிக்கு இனிய பிறந்தநாள் … Read more

இலங்கையில் இணையும் போராட்ட கைகள், பதவி விலகுவாரா ராஜபக்சே!

Sri Lanka Facing Massive Economic Crisis Ever Before

பொருளாதார சிக்கலில் தவித்து வரும் இலங்கை, அடிப்படை தேவைகளுக்கே ஆட்டம் காண துவங்கி இருக்கிறது. இந்த நிலையில் மக்கள் போராட்டமும் அங்கு வலுத்து வருகிறது. விலைவாசி உயர்வு, மக்களின் அடிப்படை தேவைகளுக்கே பிற நாடுகளிடம் கையேந்தும் நிலைமை, நிதி பற்றாக்குறை என்று இலங்கையை பொருளாதார நெருக்கடி சூழந்து வரும் இந்த நிலையில் ஒட்டு மொத்த அரசை பதவி விலகி கோரி இலங்கை முழுக்க போராட்ட கைகள் இணையத் துவங்கி இருக்கின்றன. “ இந்த சிக்கலை எப்படி எதிர்கொள்வது … Read more

தேநீர் பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சி அறிவிப்பு! தமிழகமெங்கும் அதிகரிக்கிறது தேநீர் விலை!

Tea Base Price Increasing In TamilNadu

விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு தேநீரின் அடிப்படை விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தேநீர் விறபனையாளர்கள் சங்கம் அறிவித்து இருக்கிறது. மக்களின் அடிப்படை தேவைகளும் பொருட்களும் அடிக்கடி விலை உயர்வதை கருத்தில் கொண்டு தேநீர் விற்பனையாளர்கள் சங்கம் முடிவெடுத்து, தேநீரின் அடிப்படை விலையை உயர்த்தி இருக்கிறது. ரூ 10க்கு விற்கப்பட்ட தேநீர் ரூபாய் 12 முதல் 15 வரை விற்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. “ பெரும்பாலான பேச்சலர்களுக்கு, ஆதரவு இல்லதாவர்களுக்கும் ‘டீ’ என்பதே அடிப்படை … Read more

’பீஸ்ட்’ படத்திற்கு தடை விதிக்கும் இஸ்லாமிய நாடுகள், காரணம் தான் என்ன?

Actor Vijay In Beast Movie Banned In Kuwait

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கு இஸ்லாமிய நாடுகள் தடை விதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் ‘பீஸ்ட்’. படம் ஏப்ரல் 13 அன்று திரைக்கு வர இருக்கும் நிலையில், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டுவதாக சொல்லி குவைத் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் படத்தின் வெளியீட்டிற்கு தடை விதித்து இருக்கின்றன. “ நடிகர் விஜய் என்றாலே படத்திற்கு இலவச புரோமோசன் கொடுக்க யாராவது … Read more