தமிழகத்தில் இன்றைய தினத்தில் மட்டும் 1,303 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In TamilNadu 11 10 2021

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 1,303 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 13 பேர் கொரோனோ தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,796 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,428 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தடுப்பூசி உபயோகமும் தமிழகத்தில் ஐந்து கோடியைக் … Read more

ஐபிஎல் 2021 | Qualifier 1 | ஆர்சிபியின் ஐபிஎல் கோப்பை கனவு தகர்ந்தது!

Sunil Narine Celebrating The Wicket Of Glenn Maxwell

ஐபிஎல் 2021-இன் குவாலிபையர் 1 போட்டியில், பெங்களுரு அணியை எளிதாக வென்று குவாலிபையர் 2 நோக்கி அடி எடுத்து வைத்திருக்கிறது கொல்கத்தா அணி. முதலில் ஆடிய விராட் தலைமையிலான பெங்களுரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 39(33) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய கொல்கத்தா அணி இந்த ஸ்கோரையும் த்ரிலிங்காகவே துரத்திப்பிடித்தது. இதன் மூலம் ஆர்சிபியின் கோப்பை கனவு தகர்ந்திருக்கிறது. கொல்கத்தா … Read more

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் Official Motion Poster வெளியானது!

Surya Jai Bhim Official Motion Poster Video Is Out

நடிகர் சூர்யா நடிக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மோஷன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பில், தா.செ.ஞானவேல் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படம் நவம்பர் 2 அன்று அமேசான் வலை தளத்தில் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி உள்ளது. “ இப்படத்தில் சூர்யா சமூகத்தில் நடக்கும் அடக்கு ஒடுக்கு முறைகளுக்கு … Read more

அஷ்வின் குமாரின் ’யாத்தி யாத்தி’ பாடல் புரோமோ வெளியானது!

Ashwin Kumar Yathi Yathi Promo Is Out

அஷ்வின் குமார் மற்றும் ஹர்ஷதா விஜய் இணைவில் உருவாகி இருக்கு ‘யாத்தி யாத்தி’ எனப்படும் பாடலின் புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அபிஷேக் சி எஸ் இசையமைப்பில், ராம் கணேஷ் எழுத்தில், அஷ்வின் குமார் மற்றும் ஹர்ஷதா விஜய்யின் இணைவில் உருவாகி இருக்கும் ‘யாத்தி யாத்தி’ எனப்படும் பாடலின் புரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ” அண்ணாத்த டீசரின் அறிவிப்பை மிஞ்சி அஷ்வின் குமார் அவர்களின் ‘யாத்தி யாத்தி’ புரோமோ அறிவிப்பு ட்விட்டரில் ட்ரென்ட் ஆகி … Read more

’அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க’ வருகிறது ‘அண்ணாத்த’ டீசர்!

Annaathe Teaser Releasing Date Announced

நடிகர் ரஜினி காந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சன்பிக்சர் கலாநிதிமாறன் தயாரிப்பில், இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில் ரஜினி காந்த், நயன் தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப் என்று பல்வேறு நடிகர்கள் களம் இறங்கும் அண்ணாத்த படத்தின் டீசர் அக்டோபர் 14, மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “ அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க தலைவர் வருகிறார், வழியெல்லாம் விட வேணாம் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 8 | Promo 3 | இங்கையும் அன்பு டீம், குரூப் எல்லாம் வந்திடும் போல!

Bigg Boss 5 Tamil Day 8 Promo 3 is Out

பிக்பாஸ் 5 தமிழ்-இன் எட்டாம் நாளிற்கு உரிய புரோமோ 3 இணையத்தில் வெளியாகி உள்ளது. பவ்னி ஒரு சில குரூப் இருக்கு. நாம அங்க போய் பேசுறப்போ அத இக்னோர் பண்ணிட்டு கண்டுக்காம போயிடுறாங்கன்னு இசைக்கிட்ட சொல்லிகிட்டு இருக்காங்க. ஆக மொத்தம் இந்த பிக்பாஸ்லயும் அன்பு டீம்லா உருவாகிடும்னு நெனைக்கிறேன். அதுக்கு எச்சரிக்கை தான் இந்த புரோமோ 3 போல. ” ஹைலைட்ஸ் : புரோமோ 1, புரோமோ 2 ல நாமினேசன் வச்சு வத்தி வைக்கிற … Read more

ஐபிஎல் 2021 | Eliminator | கொல்கத்தாவை எதிர்கொள்கிறது பெங்களுரு அணி!

IPL 2021 KKR VS RCB Eliminator Starts Today

ஐபிஎல் 2021-இன் எலிமினேட்டரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி. இன்று நடக்கும் எலிமினேட்டரில் மார்கன் தலைமையிலான கொல்கத்தா அணி, விராட் தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படி 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 28 போட்டிகளில் 15 போட்டிகளில் வென்று கொல்கத்தாவே முன்னிலை வகிக்கிறது. தற்போதைய சூழலில் இரு அணிகளும் … Read more

யூடியூபர் ‘சாட்டை’ துரை முருகன் திருநெல்வேலியில் கைது!

saattai duraimurugan arrested in tirunelveli

குமரியில் மலைகள் தகர்க்கப்பட்டு கனிமவளங்கள் சுரண்டப்படுவதை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் மற்றும் அரசின் செயல்பாடுகளை மிகவும் கொச்சையாக விமர்சிக்கும் விதத்தில் பேசியதாக, ‘சாட்டை’ துரை முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டுள்ளார். குமரியில் நடைபெற்ற கனிமவள சுரண்டலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கேற்று இருந்த ‘சாட்டை’ துரைமுருகன் அவர்கள், அதில் முதல்வர் குறித்தும், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் மிகவும் அவதூறாக பேசியதாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் மீது 7 … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 8 | Promo 1 | Promo 2 | ’எல்லாருமே நல்லவங்க தான்னு நீங்க நல்லவங்க வேஷம் போடாம இருந்தா நல்லாருக்கும்’

Bigg Boss 5 Tamil Day 8 Promo 1 And Promo 2 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் எட்டாம் நாளிற்கு உரிய புரோமோ1 மற்றும் புரோமோ 2 அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. வழக்கம் போல நாமினேசன் பிராசஸ் தொடங்குகிறது. அக்‌ஷாரா இசைவாணியையும், அபிஷேக் அக்‌ஷாராவையும், அண்ணாச்சி அபினய்யையும், அபினய் இசைவாணியையும் நாமினேட் செய்திருக்கின்றனர். இரண்டாவது புரோமோவும் அதே பதை பதைக்கிற நாமினேசன் தான் இனி தான் சண்டைய ஆரம்பிக்கும்னு நினைக்கிறேன். ” போடு போடு கொளுத்தி போடுன்னு பிரியங்கா புரோமோவுல கத்துற மாறி தான், ஒரு வாரம் கல கலப்பா போயிக்கிட்டு … Read more

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 19,018 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 11 10 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,018 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் கொரோனோ தொற்றுக்கு 193 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது தேசத்தில் 4,50,814 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்றைய தினத்தில் மட்டும் 21,583 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 95 கோடியாக உயர்ந்து இருக்கிறது. … Read more