50 வருடங்களுக்கு பின் ஓவல் மைதானத்தில் வெற்றியை பதிவு செய்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணி!

இந்தியா – இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று நான்காவது நாளில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுக்களையும் பறி கொடுத்து இந்திய அணியிடம் வீழ்ந்தது. கடைசியாக 1971-ஆம் ஆண்டு அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணி ஓவல் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றியை பதிவு செய்திருந்தது. அதற்கு பின் 50 வருடங்களுக்கு பிறகு கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக ஓவல் டெஸ்ட்டில் தங்களது வெற்றியை பதிவு செய்திருக்கிறது. … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 31,222 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 31,222 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு நாளில் மட்டும் 290 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,41,042-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தமட்டிலும் ஒரு சராசரி விகிதத்திலேயே தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது. தடுப்பூசி உபயோகத்தை பொறுத்தவரை இந்தியாவில் ஒட்டு மொத்தமாக அது 70 கோடியை நெருங்கி உள்ளது. நேற்றைய நிலவரப்படி ஒட்டு … Read more

இனி கடைகளில் நிறுவனங்களில் பணியாளர்களுக்கு இருக்கை கட்டாயம் – தமிழக அரசு

நாள் முழுக்க நின்றே நின்று வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு இனி இருக்கை வசதி கட்டாயம் என்று தமிழக அரசு சட்ட திருத்த வடிவம் ஒன்றை சட்ட பேரவையில் தாக்கல் செய்துள்ளது. தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தமிழக சட்ட பேரவையில் ஒரு சட்ட திருத்த மசோதோ ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது இனி கடைகளில் நிறுவனங்களில் நாள் முழுதும் நின்று கொண்டு வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு … Read more

பெரியார் பிறந்தநாள் இனி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

பெரியாரின் பிறந்த தினமான செப்டம்பர் 17, தமிழகத்தில் இனி சமூக நீதி நாளாக அனுசரிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டபேரவை அறிவிப்பின் கீழ் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேரவையில் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது பெரியார் அவர்கள் பிறந்த தினமான செப்டம்பர் 17 இனி தமிழகம் முழுக்க சமூக நீதி நாளாக அனுசரிக்கப்படும் என்று … Read more

மீண்டும் வருகிறதா உயிர்க்கொல்லி வைரஸ் என அறியப்படும் நிபா வைரஸ்?

கேரளத்தில் கடந்த ஞாயிறு அன்று உடல் நிலை குன்றி இறந்து போன 12 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பதாக கேரள சுகாதார துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. பன்றிகள் மற்றும் பழந்தின்னி வவ்வால்கள் மூலம் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் பரவும் இந்த நிபா வைரஸ் 2018-ற்கு பிறகு மறுபடியும் கேரளாவில் பதிவாகி இருப்பது அம்மாநில அரசிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பதிவாகும் ஒட்டு மொத்த கொரோனோ தொற்றில் 60 சதவிகிதத்திற்கும் மேல் கேரளாவைச் சார்ந்தது என்றிருக்கும் … Read more

முத்தையா படத்தில் அறிமுக நாயகியாக களம் இறங்கும் இயக்குநர் சங்கரின் மகள் அதிதீ சங்கர்!

பிரம்மாண்டத்தின் உச்சமாக அறியப்படும் இயக்குநர் சங்கர் அவர்கள், தெலுங்கு பட உலகிற்கு ராம் சரண்னுடன் இணைந்து அறிமுகமாக இருக்கும் அதே நிலையில், அவரது மகள் அதிதீ சங்கர், இயக்குநர் முத்தையா, கார்த்தி மற்றும் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா என்று பெரிய பட்டாளங்கள் இணையும் விருமன் படத்தில் அறிமுக கதாநாயகியாக இணைய இருக்கிறார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2D எண்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரிக்க இருக்கும் நிலையில் ,நடிகர் சூர்யா சிவக்குமார் தனது ட்விட்டர் … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 39,521 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 39,521 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு நாளில் மட்டும் 218 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 4,40,785-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 100 பேருக்கு தலா 50.84 பேர் இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 43,917 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். … Read more

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 1562 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

தமிழகத்தைப் பொறுத்த வரை கடந்த 24 மணிநேரத்தில் 1562 பேருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 20 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி தமிழகத்தில் 34,961-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கோவையில் 215 பேருக்கும் சென்னையில் 166 பேருக்கும் ஈரோட்டில் 132 பேருக்கும் புதிய தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 1684 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகள் … Read more

ட்ரென்டிங்கில் ‘டிக்கிலோனா’ படத்தின் இரண்டாவது டிரைலர்

சந்தானம், யோகி பாபு, மொட்ட ராஜேந்தர், முனிஸ்காந்த், ஆனந்த்ராஜ் என்று மிகப்பெரிய சிரிப்பு பட்டாளங்களே களம் இறங்கும் டிக்கிலோனா படத்தின் இரண்டாவது ட்ரெயிலர் நேற்று இணையத்தில் வெளியான நிலையில் இன்று ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. காமெடி கலந்த அறிவியல் பூர்வ படமாக ட்ரெயிலரை பார்க்கும் போது தெரிந்தாலும் படம் வெளி வந்தாலே அதைப்பற்றி முழுமையாக விவரிக்க முடியும். கார்த்திக் யோகி இயக்கியிருக்கும் இந்த படத்தை தயாரிப்பாளர்கள் கோபிநாதன்,வினு,வீர சங்கிலி என மூவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். முக்கியமாக படத்திற்கு … Read more

25 கோடி பார்வையாளர்களை கடந்திருக்கும் ’வாத்தி கம்மிங்’ பாடல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து கடந்த பொங்கலுக்கு வெளியாகி இருந்த மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்திருந்தது. இந்த நிலையில் தான் அந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலான வாத்தி கம்மிங் பாடல் தொடர்ந்து ட்ரென்டிங்கில் இருந்தது. உலகம் முழுக்க ரீல்ஸ்களில் ட்ரென்ட் அடித்த வாத்தி கம்மிங் பெரிய பெரிய பிரபலங்களையும் ஈர்த்த நிலையில் தற்போது 25 கோடி பார்வையாளர்களை எட்டி இருக்கிறது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கும் இந்த பாடல் வெளி … Read more