கேரளத்தில் ஆரம்பமாகிறது இரவு நேர பொதுமுடக்கம்!

நாட்டின் மொத்த தொற்றில் கேரளாவே 80 சதவிகிதத்தையும் உள்ளடக்கும் அளவுக்கு கொரோனோ தொற்று கேரளத்தில் தலைவிரித்து ஆடுகிறது. இந்த நிலையில் தான் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று (30-08-2021) முதல் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலான இரவு நேர பொது முடக்கத்தை அறிவித்துள்ளார். மேலும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலான இந்த பொது முடக்க நேரத்தில் மக்கள் வெளி வருவதற்கு அனுமதி இல்லை என்றும் … Read more

வெறும் 6 ரூபாயில் 120 கி.மீ பயணம் – கலக்கும் ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஹீரோ நிறுவனம் ஆப்டிமா HX என்னும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தது. இரண்டு பேட்டரிகள் கொண்ட இந்த பைக்கிற்கு தினம் நீங்கள் 6 ரூபாய்க்கு சார்ஜ் செய்தால் போதும் 120 கிமீ வரை பயணிக்கலாம். பெட்ரோல் விலை எகிறியதற்கு பின் பலரும் ஒரு மாற்று பயணத்தை தேடிக்கொண்டிருக்கையில் ஹீரோ நிறுவனம் அதை தந்திருக்கிறது. இரு நூறு ரூபாய்க்கு பெட்ரோல் இட்டாலே இன்றைய சூழ்நிலையில் 60 கிமீ தூரம் தான் செல்ல முடியும் என்ற நிலையில் வெறும் 6 … Read more

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,551 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1,551-ஆக உள்ளது. மேலும் நேற்றைய ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 21-ஆக உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 34,856-ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக பார்த்தால் அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 230 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்ததாக சென்னையில் 182, செங்கல்பட்டில் 122, ஈரோடு மாவட்டத்தில் 115 தொற்றுகள் பதிவாகி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் … Read more

இந்தியாவில் 63 கோடியை எட்டியிருக்கும் தடுப்பூசி உபயோகம்!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 65 லட்சத்திற்கும் மேலானோர் தடுப்பூசி எடுத்துக்கொண்டதன் மூலம் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் இந்தியாவில் 63 கோடியைக் கடந்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுகள் மக்களைச் சேர்ந்து வந்தாலும் முதல் தவணையின் போது வருகின்ற சின்ன சின்ன பக்க விளைவுகளான காய்ச்சல்,உடல் அசதி போன்றவைகளுக்கு பயந்து பெரும்பாலானோர் இரண்டாவது தவணை எடுத்துக்கொள்ள மறுக்கின்றனர். சாதாரண சின்ன சின்ன விளைவுகளுக்கு பயந்தால் பெரும் விளைவுகளை எதிர்கொள்ள … Read more

ஒரே நாளில் ஒரு கோடி பேரை சென்றடைந்திருக்கும் தடுப்பூசி!

கொரோனோ பரவலுக்கு எதிராக உலக நாடுகள் கையில் எடுத்திருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி என்றிருக்கையில் இந்தியாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 62 கோடியை கடந்துள்ளது. இ்ந்தியாவில் நேற்றைய ஒரு நாளில் மட்டும் ஒரு கோடி பேரைச் சென்றடைந்திருக்கிறது தடுப்பூசி. இதுவரை இல்லாத அளவிலான அதிகபட்ச அளவு இது ஆகும். கடந்த ஆகஸ்ட் 17 அன்று ஒரே நாளில் 88 லட்சம் பேரைத் தடுப்பூசி சென்றடைந்ததே இது வரை அதிகபட்ச அளவாக இருந்த நிலையில் நேற்று ஒரு கோடியைத் … Read more

இனி சட்டப்பேரவையில் புகழ்ச்சியாரம் பேசுபவர்களின் மீது நடவடிக்கை பாயும் – மு க ஸ்டாலின்

சட்டசபையில் ஒரு திட்டமோ அல்லது மசோதாக்களோ நிறைவேற்றுவதற்கு முன் நேரயத்தை விரயமாக்கி புகழ்ச்சியாரம் பேசினால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது கட்சியை சேர்ந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பொதுவாகவே எப்போதும் ஒரு ஆளும் தரப்பு சட்டசபைகளில் திட்டங்களை நிறைவேற்றிடும் போதும் அறிவித்திடும் போதும், திட்டம் சம்பந்தமான அறிவிப்புகள் பத்து நிமிடம் பேசப்பட்டால் ஒரு மணிநேரம் ஆவது தங்கள் தரப்பு தலைவர்/தலைவி குறித்த புகழ்ச்சியாரம் இருக்கும். இது விவாதிக்கும் மற்றும் அறிவிப்புகள் நேரத்தை … Read more

ஆப்கனில் உள்ள ஐ எஸ் தீவிரவாத அமைப்பின் கூடாரங்களை தாக்கிய அமெரிக்க ட்ரோன்கள்!

காபூல் விமான நிலையத்தில் ஐ எஸ் தீவிரவாத அமைப்புகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க கடற்படை வீரர்கள் உட்பட 100க்கு மேற்பட்டோர் பலியான நிலையில் அதற்கு அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது. ஆளில்லா ட்ரோன்கள் மூலம் ஆப்கனில் உள்ள ஐ எஸ் பயங்கரவாத அமைப்பின் கூடாரங்களின் மீது வான்வழி தாக்குதல்களை பொழிந்தது. அமெரிக்கா நடத்திய இந்த தாக்குதலில் ஐ எஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் தெரிவித்து வருகின்றன. இது குறித்து … Read more

யார்க்கர் அரக்கன் லசித் மலிங்கா பிறந்த தினம் இன்று!

ஒரு ஓவரில், ஒரு யார்க்கர் என்பதே பவுலர்களுக்கு வரமாகிப்போகும். ஆனால் இவரோ நினைத்த நேரத்தில் எல்லாம் யார்க்கரை வீசி பேட்ஸ்மேன்களை நிலைகுலைய செய்வார். சுருட்டை முடி, சிங்க வேகம், கையில் பந்தை வாங்கிக்கொண்டு முத்தமிட்டு ஓடி வந்து இவர் எறிகின்ற யார்க்கர்களில் ஸ்டம்புகள் சிதறும். ஆம் அவர் தான் யார்க்கர் மன்னன் லசித் மலிங்கா. இன்று அவரின் பிறந்த தினம். இலங்கைக்கு சமிந்தா வாஸ் அவர்களின் ஓய்விக்கு பிறகு அவரின் வெற்றிடத்தை நிரப்ப ஒரு மிகப்பெரிய பவுலரின் … Read more

200 கோடி தடுப்பூசியை செலுத்தி புதிய சாதனை புரிந்திருக்கும் சீனா!

கொரோனோ முதன் முதல் கண்டறியப்பட்ட நாடான சீனாவில் கொரோனோ பரவலுக்கு எதிராக 200 கோடி தடுப்பூசிகள் உபயோகிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனோ பரவலுக்கு எதிராக உலக நாடுகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், அத்தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவும் இதற்கு விதிவிலக்கல்ல. கிட்ட தட்ட 140 கோடி இருக்கும் சீன மக்கள் தொகையினுள் 89 கோடி பேருக்கு இரண்டு தவணையாகவும் தடுப்பூசி செலுத்தியுள்ளது சீனா அரசு. அது மட்டுமில்லாது 200 கோடிக்கும் மேல் தடுப்பூசியை … Read more

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 46,805 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக கொரோனோ தொற்றிற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 46,805-ஆக உள்ளது. மேலும் நேற்றைய ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 514-ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,37,403-ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய ஒரு நாளில் தொற்று குணமாகி வெளியோனோரின் எண்ணிக்கை 31,341-ஆக உள்ளது. இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 62 கோடியைக் கடந்துள்ளது. தேசத்தில் 100 பேருக்கு தலா 45.34 பேர் தடுப்பூசி எடுத்துக்கொள்கின்றனர். தொடர்ந்து … Read more