சக்தியை விரைவில் பிரிகிறேன் – உடுமலை கவுசல்யா

Udumalai Gousalya marriage breakup

சமூக ஆர்வலர் என்ற பிம்பத்தில் வலம் வரும் கவுசல்யா கடந்த 2015 ஆம் ஆண்டு மாற்று சாதிப்பிரிவை சேர்ந்த சங்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் மூன்று பேர் சேர்ந்த கும்பல் உடுமலை பேருந்து நிலையத்தில் சங்கரையும் கவுசல்யாவையும் சரமாரியாக வெட்டித்தீர்த்தது. இதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அனுதாபத்தில் பல சமூக ஆர்வலர்களின் அபிமானம் கிடைக்கவே,கவுசல்யாவும் தன்னை ஒரு சமூக செயற்பாட்டாளராக மாற்றிக்கொண்டு அவர்களுடன் இணைந்தார். சங்கர் … Read more

குறைத்து காண்பிக்கப்படுகிறதா கொரோனோ தொற்று…?

Corona count reduced

தொடர்ந்து நாற்பதாயிரத்தில் நிலையாக நின்று வந்த கொரோனோ தொற்று கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து வந்தது. ஆனால் மருத்துவ வல்லுநர்களோ தொற்று அதிகமாகிக்கொண்டு தான் இருக்கிறது ஆனால் புள்ளி விவரங்கள் குறைவாக காண்பிக்கப்படுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இது குறித்து சுகாதாரத்துறை நிபுணர் ரிஜோ எம் ஜான் கூறுகையில் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் தொடர்ந்து உயர்ந்து வந்ததாகவும், அதன் விளைவாக கடந்த இரண்டு வாரங்களாக … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 11,359 பேருக்கு புதியதாக தொற்று,266 பேர் தொற்றுக்கு பலி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 11,359 பேர் புதியதாக தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் நேற்றைய ஒரு நாளில் மட்டும் 266 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 4,35,050-ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கையும் 58 கோடியை கடந்துள்ளது. முதல் தவணையாக 45.11 கோடி பேரும் இரண்டாவது தவணையாக 12.95 கோடி பேரும் இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். முதல் … Read more

தமிழகத்தில் வருகிறது 24 மணிநேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் – தமிழக அரசு

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக, தமிழக அரசின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் மருத்துவம் மற்றும் மக்கள்நலவாழ்வு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழக அரசின் அறிவுறுத்தல்களின்படி அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், புறநகர் மருத்துவமனைகள் என யாவற்றையும் கூட்டாக ஒன்றிணைத்து 55 தடுப்பூசி மையங்கள், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டமைக்கப்படும் என்று தமிழக அரசின் வழிகாட்டுதல்களின் படி இயங்கும், … Read more

ஹேஸ்டாக் போரில் மாஸ்டரை வலிமையாக முந்திய ’வலிமை’

கடந்த ஜூன் மாதம் வரை ட்விட்டரில் இந்திய அளவில் அதிகமாக பகிரப்பட்ட ஹேஸ்டாக்குகளில் வலிமை முதலிடத்தை பிடித்துள்ளதாக ட்விட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒரு காலத்தில் தெருக்களத்தில் நின்று தன் ஹீரோவின் பேனர், போஸ்டர்களை ஒட்டுவதற்கு இடத்தை பிடிப்பதற்காக இரு வேறு ஹீரோக்களின் ரசிகர்கள் சண்டையிட்டு வந்தனர். அது கைக்கலப்பில் கூட கொண்டு போய் முடியும். ஆனால் இன்றெல்லாம் அந்த ரசிக சண்டைகள் டிஜிட்டல் சண்டைகளாக மாறி உள்ளன. லைக்குகள்,சேர்கள்,ட்ரென்டிங்குகள்,வசூல்கள் என்று இதை வைத்து தான் இன்று ரசிகர்கள் … Read more

தலிபான்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் பஞ்சஷேர் மாகாணம்!

அமெரிக்க படைகள் வெளியேறிய ஏழு நாட்களுக்குள் தலிபான்கள் வரிந்து கட்டி அனைத்து மாகாணத்தையும் கைப்பற்றிய போதும் ஒரு மாகாணம் மட்டும் அவர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறது. அது தான் பஞ்சஷேர் மாகாணம். ஆப்கானிஸ்தானின் அனைத்து மாகாணங்களும் தலிபான்களுக்கு அடிபணிந்து விட்ட நிலையில் பஞ்சஷேர் எனப்படும் ஒரு மாகாணம் மட்டும் தலிபான்களை சிங்கம் போல எதிர்த்து நிற்கிறது. தன் பேரிலேயே ஐந்து சிங்கங்களைக் கொண்டிருக்கும் பஞ்சஷேர் மாகாணம் இதுவரை எந்த போருக்கும் அடிபணிந்தது இல்லை. 70,80 களில் சோவியத் … Read more

கொரோனோ மூன்றாவது அலை அக்டோபரில் உச்சம் பெறும் – தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம்

நேற்றைய தினம் வரை இந்தியாவில் புதிய தொற்றின் விகிதம் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. மீட்பு விகிதமும் இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் தான் மூன்றாவது அலையின் பயத்தை கொடுத்திருக்கிறது தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் பிரதமர் அலுவலகத்தில் கொடுத்திருக்கும் அறிக்கை. உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் மூன்றாவது அலை குறித்த அறிக்கை ஒன்றை நேற்றைய தினம் பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளது. அதில் கொரோனோ மூன்றாவது … Read more

பொறியியல் சேர்க்கை நிகர மதிப்பெண் கணக்கீட்டில் இருந்து வேதியியல் பிரிவு நீக்கம் – தமிழக அரசு

தமிழக அரசு, பொறியியல் சேர்க்கை குறித்த முக்கியமான அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது பொறியியல் சேர்க்கை நிகர மதிப்பெண்கள் கணிதம்,இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப்பிரிவுகளின் மதிப்பெண்களின் மூலம் கணக்கீடு செய்யப்படும். தற்போது அந்த நிகர மதிப்பெண்ணில் இருந்து வேதியியல் பிரிவு நீக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொதுவாகவே பொறியியல் சேர்க்கை என்றால் கணிதம்,இயற்பியல்,வேதியியல் பாடப்பிரிவுகளில் ஒரு மாணவர் எடுத்த மதிப்பெண்ணிலிருந்து நிகர மதிப்பெண் கணக்கிட்டு அவர்களை கவுன்சிலிங் மூலம் வரிசைப்படி அழைத்து அந்த … Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய 58 பேருக்கு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை சம்மன் அனுப்பி உள்ளது. ஸ்டெர்லைட் எனப்படும் தாமிர உருக்காலை தொடர்ந்து சுற்று சூழலுக்கும் அந்த பகுதிகளில் வசிக்கின்ற மக்களின் உடல் நிலைக்கும் கேடு விளைவித்து வந்ததாக தெரிகிறது. தொடர்ந்து ஆலையை மூட சொல்லி பல்வேறு தரப்பினர் மனுக்கள் மூலம் பலரிடம் கோரிக்கை விடுத்த போதும் எந்த வித நடவடிக்கையும் இல்லாத நிலையில் தான் மே ,2018-இல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான … Read more

இந்தியாவில் வெகுவாக குறைந்து வரும் கொரோனோ தொற்று – இந்திய மருத்துவ கவுன்சில்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,735 பேருக்கு புதியதாக தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 385 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளதாகவும் இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 4,34,784-ஆக உயர்ந்துள்ளது. வெகு நாட்களுக்கு பிறகு முப்பதாயிரத்திற்கும் கீழ் குறைந்திருக்கிறது இந்தியாவில் கொரோனோ தொற்று. தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 57.62 கோடியாக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் 100 பேருக்கு 43.24 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். தொற்று … Read more