இந்தியாவில் 54.58 கோடி பேரை சென்றடைந்திருக்கும் கொரோனோ தடுப்பூசி!

அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் தடுப்பூசி திட்டங்களை செயல்படுத்துவது என்பது ஒரு கடினமான விஷயம் ஆகும். அதையும் தாண்டி இந்திய மக்கள் தொகையில் 54.58 கோடி பேருக்கு தடுப்பூசி சென்றடையும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம். 130 கோடி பேர் இருக்கும் இந்தியாவில் நாட்டிற்குள்ளேயே தடுப்பூசிகளை உற்பத்தி செய்து அதை 54 கோடி பேருக்கு சென்றடையும் வகையில் செய்திருக்கிறது இந்திய அரசு. நம்மை விட அதிக தடுப்பூசி கை இருப்பு வைத்திருக்கும் … Read more

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள்!

சில நாட்களாகவே ஆப்கானிஸ்தானில் ஆப்கன் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினத்தில் ஆப்கனின் தலைநகர் காபூலை தலிபான்கள் நெருங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றிவிட்டதாக தலிபான் செய்தி தளம் தனது இணையதளத்தில் அறிவித்து வருகிறது. கடந்த 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு தலிபான்களுக்கு எதிராக போராடி வந்த அமெரிக்க படை ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின்னர் … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 32,937 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று, 417 பேர் தொற்றுக்கு பலி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 32,937 பேர் புதியதாக கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாகவும், 417 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளதாகவும் இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த பலி எண்ணிக்கை 4,31,642-ஆக உயர்ந்து உள்ளது. நேற்றைய ஒரு நாளில் மட்டும் 17 லட்சம் பேருக்கு கொரோனோ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் ஒட்டு மொத்தமாக இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 54.58 கோடியாக உயர்ந்துள்ளது. ஒரு நாளில் 32,937 பேர் … Read more

தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிகளுக்கு தயாராகிறாரா அஜித்?

திரைத்துறை தவிர தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதித்து வரும் அஜித் தற்போது தேசிய அளவிலான துப்பாக்கி போட்டிகளுக்கு தயாராகி வருவதாக அஜித் அவர்களின் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. திரையில் அஜித் அவர்கள் சாதிக்காதது எதுவும் இல்லை. ஏற்கனவே கார் ரேஸ், மற்றும் சிறிய இலகு ரக விமான தயாரிப்பு என்று நடிப்பதை தவிர வேறு சில துறைகளிலும் ஈடுபட்டு வந்த அஜித் இடையில் துப்பாக்கி சுடுதலிலும் பயிற்சி பெற்று வந்தார். சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் நடைபெற்ற … Read more

இலங்கையை புரட்டி போடும் டெல்டா வகை கொரோனோ வைரஸ்!

தொடர்ந்து சில நாட்களாகவே இலங்கையில் கொரோனோ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பாதிப்புக்குள்ளானவர்களில் 75 சதவிகிதம் பேருக்கு டெல்டாவகை கொரோ வைரஸ் தொற்று இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு 160 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 5,935-ஆக உயர்ந்துள்ள நிலையில், வேகமாக பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை கொரோனோ வைரஸ் தொடர்ந்து மாகாணங்களுள் பெருக்கெடுக்க … Read more

ஆப்கானிஸ்தான் தலைநகரை நெருங்கிய தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானின் ஒவ்வொரு மாகாணங்களாய் தலிபான்கள் கைப்பற்றி வரும் நிலையில் தற்போது தலைநகர் காபூலை குறி வைத்து நகர்ந்து வருவதாக அந்நாட்டு பத்திரிக்கைகள் தெரிவித்து வருகின்றன. ஏற்கனவே ஆப்கன் படைகளின் அசைக்க முடியாத நகராக கருதப்படும் மசார்-இ-ஷெரீப் மற்றும் ஜலாலாபாத் முழுவதையும் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தற்போது தலைநகர் காபூலை கைப்பற்றும் முனைப்பில் இறங்கி உள்ளனர். ஆப்கன் முழுவதையும் கைப்பற்றும் நோக்கில் தொடர்ந்து தலிபான்கள் முன்னேறி வரும் நிலையில், ஆப்கன் படைகள் எதிர்த்து போராடினாலும் தாக்குப்பிடிக்க முடியாது நிலைகுலைந்த … Read more

உலகிலேயே அதிக தடுப்பூசி மக்களுக்கு விநியோகம் செய்த நாடுகளில் இந்தியாவிற்கு இரண்டாம் இடம்!

நேற்றைய தினம் வரை இந்தியாவில் இது வரை 55.73 கோடி தடுப்பூசிகள் ஒன்றிய அரசிடம் இருந்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் 53.26 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. மக்களுக்கு அதிக தடுப்பூசி செலுத்திய நாடுகளுள் சீனாவிற்கு அடுத்து இந்தியா இருப்பதாகவும் தனது அறிக்கையில் அமைச்சகம் அறிவித்துள்ளது. பயன்படுத்திய 53.26 கோடி தடுப்பூசிகள் போக மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 2.85 கோடி தடுப்பூசிகள் … Read more

’ எல்லா புகழும் இறைவனுக்கே ‘ – 29 Years Of Rahmanism

’ சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை ‘ என்று 29 வருடங்களுக்கு முன்பு தன் இசைப்பயணத்தை தொடர்ந்த இந்த மனிதன் \’ பரம் பரம் பரம் பரம் பரமசுந்தரி ‘என்று இன்றளவும் ஹிட் அடித்துக் கொண்டு தான் இருக்கிறார். இசை எப்படி தான் தீராமல் இருக்கிறதோ இந்த இசை மனிதனிடம். இசை என்னும் ஒரு யுகத்தையே தன் கையில் வைத்திருப்பார் போல. திலீப் குமார் என்னும் சிறுவன்….! சாரி சாரி கதைக்கு ரொம்ப முன்னாடி போயிட்டோமோ..! … Read more

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதியதாக 36,083 பேருக்கு கொரோனோ தொற்று, 493 பேர் தொற்றுக்கு பலி

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதியதாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 36,083-ஆகவும் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 493-ஆகவும் உள்ளது. இந்தியாவில் கொரோனோ தொற்று தொடர்ந்து இரண்டாவது நாளாக 40,000-க்கும் கீழாக பதிவாகி உள்ளது. கடந்த ஒரு நாளில் மட்டும் புதியதாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 36,083-ஆகவும் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 493-ஆகவும் உள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,31,225 ஆக உயர்ந்துள்ளது. ஓரு … Read more

பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் மீரா மிதுன் கைது!

தான் வெளியிட்ட வீடியோ ஒன்றில் பட்டியலின மக்களை சாடும் வகையில் பேசியிருந்த மீராமிதுன்,சில நாட்களாகவே பதுங்கியிருந்த நிலையில் கேரளாவில் கைது செய்யப்பட்டார். அடிக்கடி ஏதாவது பேசி சர்ச்சைகளில் சிக்கி கொள்ளும் மீரா மிதுன் சில வாரங்களுக்கு முன் தான் வெளியிட்ட வீடியோ ஒன்றில் பட்டியலின மக்களை மிகவும் அவதூறாக பேசி இருந்தார். இது குறித்து சென்னை எம்.கே.பி.நகர் காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். வழக்கு பதிவானது தெரிந்ததுமே தான் தங்கி இருந்த இடத்தை … Read more