தமிழகத்தில் இனி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

1970-இல் கலைஞர் கருணாநிதி அவர்கள் கொண்டு வந்த திட்டமான அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் திட்டம் 51 வருடங்களுக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் இன்று தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டது. ’அன்னை தமிழில் அர்ச்சனை’ திட்டத்தை தொடர்ந்து, முறையாக அர்ச்சகருக்கு பயிற்சி பெற்று படித்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தி இருக்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இதன் மூலம் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 58 பேருக்கும் கபாலீஸ்வரர் கோவில் திருமணமண்டபத்தில் வைத்து பணி நியமன … Read more

இனி பனைமரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி அவசியம் – தமிழக வேளாண் துறை

தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன் முறையாக வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை, அமைச்சர் MRK பன்னீர் செல்வம் வாயிலாக தாக்கல் செய்யப்பட்டது. பனை மரங்கள் பற்றிய பிரிவில் அமைச்சர் பன்னீர் செல்வம் கூறுகையில் இனி ரேசன் கடைகளில் பனைவெல்லம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சாலையோரங்களில் இருக்கும் பனை மரங்களை வெட்ட நேரிட்டால் மாவட்ட ஆட்சியரின் அனுமதி அவசியம் என்றும் அறிவித்துள்ளார். மேலும் வேளாண் துறை, வேளாண்மை-உழவர் துறை என்று பெயர் மாற்றப்பட்டு அழைக்கப்படும் என்றும் … Read more

டெல்டா பிளஸ் கொரோனோ தொற்றுக்கு மஹாராஷ்டிரத்தில் 5 பேர் பலி

மஹாராஷ்டிரத்தில் டெல்டா பிளஸ் வகை கொரோனோ தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் டெல்டா பிளஸ் தொற்றுக்கு மஹாராஷ்டிரத்தில் மட்டும் 5 பேர் பலியாகி உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. இதில் இரண்டு தவணையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும் டெல்டா பிளஸ் தொற்றுக்கு பலியாகி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கடந்த ஜூலை 21 அன்று டெல்டா பிளஸ் வகை கொரோனோ தொற்று உறுதி … Read more

ரஷ்யாவில் வலுமை பெறுகிறது டெல்டா வகை கொரோனோ வைரஸ்!

ரஷ்யாவில் கடந்த ஒரு நாளில் மற்றும் புதியதாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 22,277-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தொற்று பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 815 ஆக உள்ளது. தொடர்ந்து மூன்று நாளாக தினசரி தொற்று பலி ரஷ்யாவில் உயர்ந்த வண்ணமாகவே உள்ளது. இதன் மூலம் ரஷ்யாவில் டெல்டா வகை கொரோனோ வலுமையடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. மாஸ்கோவில் மட்டும் அதிகபட்சமாக 2,529 பேருக்கு தொற்று புதியதாக பதிவாகி உள்ளதாக … Read more

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 38,867 பேருக்கு கொரோனோ தொற்று, 478 பேர் தொற்றுக்கு பலி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக கொரோனோ தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 38,867-ஆக உள்ளது. இது நேற்றைய தொற்று எண்ணிக்கையை விட 3.6 சதவிகிதம் குறைவு. மேலும் நேற்றைய ஒருநாளில் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 478-ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்தமாக கொரோனோவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 4,30,732-ஆக உயர்ந்துள்ளது என இந்திய மருந்துவ அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் மட்டுமே நேற்றைய ஒரு நாள் தொற்று பாதிப்பு 20,452-ஆக உள்ளது. ஒட்டு மொத்த … Read more

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படக் கூடிய நெகிழி வகை பொருள்களுக்கு தேசம் முழுக்க தடை

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு எறியக்கூடிய அனைத்து நெகிழி வகை பொருள்களுக்கும் 2022 முதல் தேசம் முழுக்க தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.மண்,கடல்,காடு என்று பூமியின் எங்கு பார்த்தாலும் தவிர்க்க முடியாத குப்பைகளாய் இருக்கிறது இந்த நெகிழிகள். இன்னும் ஆயிரம் வருடம் கழித்து மண்ணைத்தோண்டினாலும் அது அழியாமல் அப்படியே இருக்கும். எரித்தாலும் காற்றை மாசுபடுத்தும் புதைத்தாலும் பூமியில் மண்ணின் தன்மையை மாசுபடுத்தும். அதனை கருத்தில் கொண்டே 2022 முதல் தேசம் முழுக்க ஒரு முறை பயன்படுத்தப்பட்டு … Read more

தன்னம்பிக்கை என்பதற்கு அர்த்தம் கேட்டால் ‘உசேன் போல்ட்’ என்ற ஒரு பெயரில் சொல்லி விடலாம்

உலக அரங்கு, ஸ்பிரின்ட் களம், ஒட்டு மொத்த போட்டியாளர்களும் சிறுத்தை வேகத்தில் ஓடுகின்ற ஒரு களம். ஆனால் அங்கு அந்த சிறுத்தைகளை எல்லாம் முந்திக் கொண்டு ஒரு மின்னல் சிரித்துக்கொண்டே இலக்கை அடைகிறது. அவர் தான் உசேன் போல்ட். எது தன்னம்பிக்கை என்றால் இலக்கிற்கு அருகில் சென்று திரும்பி பார்த்து தன் பின்னால் ஓடுபவர்களிடம் நான் தான் இலக்கை முதலில் அடைய போகிறேன் என்பதை தன் புன்னகையில் அவர்களுக்கு வெளிப்படுத்தும் அந்த சுபாவம் தான். ஆம் தன் … Read more

தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்டம் 150 நாள் வேலைத்திட்டமாக மாற்றம் – தமிழக பட்ஜெட்

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 2021-22 அறிக்கையில் நூறு நாள் வேலைத்திட்டம் பற்றிய பிரிவில், இனி நூறு நாள் வேலைத்திட்டம் நூற்று ஐம்பது நாள் வேலைத்திட்டமாக மாற்றி அமைக்கப்படும் என்றும் 273 ரூபாயாக இருந்த தினசரி கூலி 300 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் அறிக்கை விடுக்கப்பட்டது. கிராம மற்றும் குக்கிராமங்களில் நடைபெறும் சிறு குறு பணிகளுக்காக ஒரு குறிப்பிட்ட குழுவை அப்பணிதன் கீழ் அமைத்து சீரமைப்பதற்காக தொடங்கப்பட்ட ஒரு சீரிய திட்டமே இந்த நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம். … Read more

பெட்ரோல் விலை மீதான வரி லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைப்பு – தமிழக பட்ஜெட்

சென்னை கலைவாணர் அரங்கில் காலை முதலே தொடங்கப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு சிறப்பு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் பெட்ரோலியம் தொடர்பான அறிவிப்புகளின் கீழ், நடுத்தர ஏழை மக்களை கருத்தில் கொண்டு, பெட்ரோல் விலை மீதான வரியை மூன்று ரூபாய் குறைப்பதாக அறிவித்துள்ளார். இதனால் ஆண்டுக்கு ரூபாய் 1160 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் அரசு சமாளித்துக்கொள்ளும் என்று அறிக்கை விடுத்துள்ளார். கடந்த சில நாட்களாகவே நூறு ரூபாய்க்கும் அதிகமாக … Read more

தமிழக காவல் துறையில் 14,317 காலி பணியிடங்கள்

தமிழக வரலாற்றில் இன்று முதல் முறையாக காகிதமில்லா முறையில் பட்ஜெட், தமிழக நிதி அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் மூலம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் காவல் பணிகள் பிரிவுகள் குறித்த அறிக்கையில் தமிழக காவல் துறையில் 14,317 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் விரைவில் அந்த காலி பணியிடங்கள் சீரூடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பபடும் என்றும் அறிவித்து இருக்கிறார். நீண்ட கொரோனோ இடைவெளியில் எந்த வித அரசு பணியிடங்களுக்கும் தேர்வுகள் நடக்காத நிலையில் தேர்வை எதிர் நோக்கி … Read more