இனி அனைத்து அரசுத்துறை அலுவலகங்களிலும் தமிழ் ஆட்சி மொழி – தமிழக அரசு

தலைமைச்செயலகம் முதல் அனைத்து தமிழக அரசுத்துறைகளிலும் தமிழ் ஆட்சி மொழியாக்கப்படும் என்று தமிழக நிதி துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கலில் அறிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டபேரவையில் முதன் முறையாக காகிதமில்லா பட்ஜெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கலின் போது மொழி மற்றும் மொழி சம்மந்தமான தொல்லியல் ஆய்வுகள் குறித்த அறிக்கையில் அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் ஆட்சி மொழியாக்கப்படும் என்றும் தமிழ் வளர்ச்சிக்கு என்று 80.26 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தொல்லியல் ஆய்விற்கு ரூபாய் 5 கோடி … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 40,120 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று, 585 பேர் தொற்றுக்கு பலி

தொடர்ந்து ஏற்றமாகவும் இறக்கமாகவும் இருந்து வரும் கொரோனோ தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் சராசரியாக நாற்பதாயிரம் என்ற நிலைக்கு அருகில் எப்போதும் இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக கொரோனோ தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 40,120 ஆகவும் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 585 -ஆக உள்ளதாகவும் இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது. அடுத்தடுத்து வருகின்ற விழாக்காலங்கள், கோவில் நிகழ்வுகள், அரசு நிகழ்வுகள் என்று மக்கள் மொத்தமாய் கூடும் நிகழ்வுகளுக்கும், பண்டிகை தினங்களுக்கும் … Read more

ஏழு வருடத்திற்கு பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய வீரருக்கு கிடைத்திருக்கும் சதம்

இந்தியா – இங்கிலாந்திற்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தி இருக்கிறார் இந்திய வீரர் கே எல் ராகுல். இது லார்ட்ஸ் மைதானத்தில் ஏழு வருடங்களுக்கு பிறருக்கு ஒரு இந்திய வீரருக்கு கிடைக்கும் சதம் ஆகும். பொதுவாகவே லார்ட்ஸ் மைதானம் என்பது ‘Mecca Of Cricket’ என்று எல்லோரோலும் அறியப்படும். அங்கு சதம் அடித்தால் ஒரு மிகப்பெரும் பெருமையாகவே கொள்ளப்படும். கடைசியாக இந்திய வீரர் அஜிங்கிய ரஹானே 2014-இல் இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் … Read more

52 கோடியை கடந்து விட்டது தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை – இந்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் 52 கோடியை கடந்தது தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை. ஒன்றிய அரசு அளித்த 54.04 கோடி தடுப்பூசிகளுள் மாநில மற்றும் யூனியன் பிரேதசங்கள் 52.36 கோடி தடுப்பூசிகளை முழுமையாக உபயோகித்து இருப்பதாகவும் 2.5 கோடி தடுப்பூசிகளை மிச்சம் வைத்திருப்பதாகவும் இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. அதிக தடுப்பூசி செலுத்திய மாநிலங்களுள் முதல் ஐந்து இடங்களை உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா,குஜராத்,மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் பிடிக்கின்றன. உலக அளவில் அதிகபட்ச தடுப்பூசி செலுத்திய நாடுகளுள், … Read more

அல்ஜீரியாவில் காட்டுத் தீ – 28 ராணுவ வீரர்கள் உட்பட 69 பேர் பலி

அல்ஜீரியாவின் கைபல் பிராந்தியந்தில் தொடங்கிய காட்டுத்தீ தொடர்ந்து மூன்றாவது நாளாக எரிந்து பல்வேறு இடத்திற்கும் பரவி வருகிறது. பல்லாயிரக்கணக்கோர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவித்து வரும் நிலையில் 28 ராணுவ வீரர்கள் உட்பட 69 பேர் அந்நாட்டில் பலியாகி உள்ளதாக அந்நாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்கு காட்டுத்தீ பரவி வருவதால் பல்லாயிரக்கணக்கோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் அமற்றப்பட்டு வருகின்றனர். வெப்ப நிலையும் 50 டிகிரி செல்சியசை அல்ஜீரியாவில் தொட்டுள்ளதால் காட்டுத்தீயை அணைப்பதில் … Read more

ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனோவிற்கு 808 பேர் பலி – இது தினசரி பலியில் புதிய உச்சம்

ரஷ்யாவில் தினசரி கொரோனோ பலி எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 808 பேர் கொரோனோவிற்கு பலி ஆகி உள்ளதாக ரஷ்யன் பெடரல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 1,68,049 ஆக உயர்ந்துள்ளது. உலகிலேயே அதிகபட்ச இறப்பை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது ரஷ்யா. ரஷ்ய ஊடகங்கள் கொரோனோ இறப்பை பற்றி தெரிவிக்கையில் ரஷ்யாவில் ஒட்டு மொத்த இறப்பு மூன்று லட்சத்தை தாண்டி இருக்கும் என்றும் … Read more

62-ஆவது வருட திரைப்பயணத்திற்குள் அடி எடுத்து வைக்கும் கமல் என்னும் ஆத்ம நடிகன்

1960-இல் ‘களத்தூர் கண்ணம்மா’ என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக இந்த சினிமா உலகிற்கு அறிமுகம் ஆனார் கமல்ஹாசன். இன்றோடு இந்த மனிதன் சினிமாவிற்கு வந்து 62 வருடம் ஆகிறது. 220 படங்களுக்கு மேல் நடித்தாகிற்று. இன்றும் தீரவில்லை இந்த மனிதனுக்குள் இருக்கும் அந்த நடிப்பின் ஊற்று.  நடிகர்,இயக்குநர்,தயாரிப்பாளர்,நடன இயக்குனர்,எழுத்தாளர் என்று எத்தனை பரிணாமங்கள் தான் இந்த 62 வருடத்திற்குள்! சிறந்த நடிகர் என்னும் முறையில் நான்கு தேசிய விருதுகள், சிறந்த தயாரிப்பாளர் என்னும் முறையில் ஒரு தேசிய … Read more

மீண்டும் அதிகரிக்கிறது கொரோனோ பாதிப்பு – கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,195 பேருக்கு தொற்று

தொடர்ந்து மருத்துவ வல்லுநர்கள் மூன்றாவது அலை குறித்து எச்சரித்து வந்தாலும் மக்கள் கொரோனோ தடுப்பு முறைகளை முறையாக கையாளாதாதன் விளைவு மீண்டும் அதிகரித்து வருகிறது கொரோனோ தொற்று. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதியதாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,195-ஆகவும் தொற்றின் காரணமாக 490 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய மருந்துவ கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது. நேற்றைய ஒரு நாளில் தொற்றுக்கு 490 பேர் உயிரிழந்ததன் மூலம் மொத்த உயிரிழப்பு 4,29,669 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தடுப்பூசி … Read more

GSLV F10 ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்தது – இஸ்ரோ தலைவர் சிவன்

புவி கண்காணிப்பு செயற்கைகோளுடன் விண்ணில் ஏவப்பட்ட GSLV F10 தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோல்வியில் முடிந்ததாக இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்துள்ளார். இயற்கை பேரிடர்,சுற்றுச்சூழல் மற்றும் வனவியல் ஆராய்ச்சிக்காக EOS-3 எனப்படும் அதிநவீன கண்காணிப்பு செயற்கைகோளுடன் விண்ணில் ஏவப்பட்ட GSLV F10, கிரையோஜெனிக் என்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோல்வியில் முடிந்ததாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவன் அறிவித்துள்ளார். கொரோனோவின் காரணமாக தொடர்ந்து தாமதமான இஸ்ரோவின் பல்வேறு செயல்பாடுகளுக்கு பின் தற்போது தொடங்கிய … Read more

ஆப்கானிஸ்தானில் அமைதி வேண்டும் – உலக தலைவர்களுக்கு கோரிக்கை விடுத்த கிரிக்கெட் வீரர் ராஷித் கான்

ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளை தலிபான்கள் அரசிடம் இருந்து கைப்பற்றி வரும் நிலையில் அங்கு அமைதி சீர்குலைந்து பொது மக்கள் கொல்லப்படும் நிலையும் நிலவி வருகிறது. இதனைக்குறித்து ஆப்கன் கிரிக்கெட் வீரர் ராஷித்கான் தனது ட்விட்டரில் “ உலக தலைவர்களே எங்களுக்கு அமைதி வேண்டும் இங்கு எங்கள் உரிமை பறிக்கப்பட்டு நிலம் பறிக்கப்படு உடைமைகள் பறிக்கப்பட்டு கொல்லப்படுகிறோம் எங்களை காப்பாற்றுங்கள் “ என்று கோரிக்கை விடுத்துள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானில் தங்கி தலிபான்களுக்கு எதிராக போர் புரிந்து … Read more