ஈரான் மற்றும் ரஷ்யாவில் தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனோ பலிகள்!

இரண்டு வருடங்கள் ஆகியும் இன்னமும் ஓயாத கொரோனோ அலை மறுபடியும் உலக நாடுகளில் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. ஈரானில் நேற்றைய நிலைப்படி 39,600 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 546 பேர் பலியாகி உள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவில் 22,160 பேருக்கு தொற்று உறுதி ஆகி உள்ளதாகவும் 769 பேர் பலியாகி உள்ளதாகவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தொடர்ந்து உலக நாடுகளை பயமுறுத்திவரும் இந்த கொரோனோ என்று தான் ஓய்ந்து இந்த உலகை … Read more

1 யூனிட் மின்சாரத்திற்கு 2.36 ரூபாய் இழப்பு, 1 கி.மீ பேருந்து பயணத்திற்கு 59.15 ரூபாய் இழப்பு – வெள்ளை அறிக்கை

தமிழகத்தில் அரசுப்பேருந்து 1 கிலோ மீட்டர் தூரம் ஓடினால் 59.15 ரூபாய், போக்குவரத்து துறைக்கு இழப்பு ஏற்படுவதாகவும், மின்சாரத்துறையில் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு தலா 2.36 ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது வெள்ளை அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து இன்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலமாக வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர், தமிழகத்தில் மின்சாரத்துறைக்கு ரூபாய் இரண்டு … Read more

தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூபாய் 2,63,976 கடன் – வெள்ளை அறிக்கை

தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் மேலும், ரூபாய் 2,63,976 கடன் இருப்பதாக தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விடுத்த வெள்ளை அறிக்கையில்  தெரிவித்துள்ளார். இதற்கு முந்தைய அரசு மூல தன பொருள்களையும் திட்டங்களையும் உருவாக்குவதற்கு ஆக்கிய செலவை விட அரசை நடத்துவதற்கு உபயோகித்த செலவே அதிகம். அதுவே இத்தகைய நிதிச்சுமைக்கு தமிழகத்தை ஆளாக்கியதாக நிதி அமைச்சர் இதற்கு முந்தைய அரசை சாடியுள்ளார். இதற்கு முந்தைய அரசு மாநிலத்தின் ஒட்டு மொத்த உற்பத்திக்கு ஏற்ப வரியை வசூலிக்காமல் விட்டதாலும், … Read more

தன் மீது விதிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி பப்ஜி மதன் உயர் நீதிமன்றத்தில் மனு

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டிற்கென ஒரு யூடியூப் சேனல் உருவாக்கி அதில் கொடிகட்டி பறந்தவர் பப்ஜி மதன். தொடர்ந்து தான் வெளியிடும் வீடியோக்களில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியதோடு மட்டுமில்லாமல் பெண்களை இழிவான வார்த்தைகளோடு பேசியும் வந்தார். இதனால் நீதிமன்றம் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டது. கடந்த ஜூன் 18 அன்று கைது செய்யப்பட்ட மதன் தற்போது தன் மீது சுமத்தப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி உயர் நீதி மன்றத்தில் மனு ஒன்றை … Read more

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 35,499 பேருக்கு கொரோனோ தொற்று,447 பேர் பலி

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் 35,499 பேருக்கு கொரோனோ தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 447 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,28,309- ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. நேற்றைய ஒரு நாளில் மட்டும் 13,71,871 மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப் பட்டுள்ளன. இது வரை மொத்தமாய் 48 கோடிக்கும் மேல் மாதிரிகள் இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்றைய ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 17,06,598 பேர் கொரோனோ … Read more

கோவாக்சின்,கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து போட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் நடத்திய ஒரு ஆய்வில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து போட்டவர்களுக்கு கொரோனோவிற்கு எதிரான நோய் தடுப்பாற்றல் பெருகி உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதாவது முதல் தவணையில் ஒரு தடுப்பூசியும் இரண்டாவது தவணையில் மற்றுமொரு தடுப்பூசியும் எடுத்துக்கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பெருகி இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் ஒரு பிரிவினர் முதல் தவணையாக கோவாக்சினும் தவறுதலாக இரண்டாவது தவணையில் கோவிஷீல்டும் எடுத்துக்கொண்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய ஆய்விலேயே இத்தகைய ஆச்சர்யமான முடிவு … Read more

பட்டியலின சமூகத்தை இழிவு படுத்தியதாக மீரா மிதுன் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

ஏற்கனவே ரஜினி,விஜய்,ஜோதிகா,ஐஸ்வர்யா ராஜேஷ் என்று பிரபலங்களை அவ்வப்போது அவதூறாக பேசி சர்ச்சைகள் செய்து கொண்டிருந்த மீரா மிதுன், தற்போது தான் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில் குறிப்பிட்ட சாதியின் பெயரை சொல்லி அவர்களை இழிவாக பேசி இருப்பது இணையத்தில் வைரலாகி பலராலும் கண்டிக்கப்பட்டு வருகிறது. இதனைக் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அவர்கள் சென்னை காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரின் பேரில் மீரா மிதுன் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து பல்வேறு … Read more

விஜய்யுடன் இணையும் செல்வராகவன்…?

நடிகர் விஜய் – பூஜா ஹெக்டே – இயக்குநர் நெல்சன் – சன்பிக்சர் நிறுவனம் ஆகியோர் ஒன்றாக இணையும் ‘ BEAST ‘ படத்தில் தற்போது செல்வராகவனும் இணைய இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. செல்வராகவன் – விஜய் கூட்டணியில் ஒரு படம் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு விஜய் படத்தில் இயக்குநர் செல்வராகவன் நடிக்கிறார் என்ற தகவல் அவர்களை குஷி படுத்தியுள்ளது. ஏற்கனவே அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் சாணிக்காயிதம் என்னும் படத்தில் நடிகராக களம் இறங்கியுள்ள செல்வராகவன் ‘ … Read more

இரண்டு நாளில் 13,247 பேரை சென்றடைந்த மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்

வயது முதிர்வின் காரணமாக தங்களுடைய அத்தியாவசிய மருத்துவ தேவைக்காக மருத்துவமனையை நாட முடியாமல் பலரும் இன்று வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். அவர்கள் பயன் பெறும் வகையில் தமிழக அரசின் சார்பில் கொண்டு வரப்பட்ட திட்டமான ‘ மக்களைத் தேடி மருத்துவம் ‘ இரண்டு நாட்களுக்குள் 13,247 பேரை சென்றடைந்திருக்கிறது என்று மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனோ சூழல்  மற்றும் வயது முதிர்வின் காரணமாக நடக்க முடியாமல் எத்தனையோ சர்க்கரை நோயாளிகளும் இரத்த அழுத்த நோயாளிகளும் … Read more

135 நாடுகளில் உருமாறிய டெல்டா வகை கொரோனோ – உலக சுகாதார அமைப்பு

கொரோனோ என்னும் நுண்கிருமியுடன் எப்படி போராடுவது என்று உலகமே விழி பிதுங்கி நிற்கும் இந்த சமயத்தில் உருமாறிய டெல்டா வகை கொரோனோ உலகெங்கும் பெருக்க தொடங்கி உள்ளது. இது வரை 135 நாடுகளில் உருமாறிய டெல்டா வகை கொரோனோ பரவத் தொடங்கி விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை விடுத்துள்ள நிலையில் அடுத்து என்ன செய்வதென்றே அறியாமல் குழம்பி நிற்கிறது உலக நாடுகள். உலக நாடுகள் அனைத்தும் கொரோனோவிற்கு எதிராக தடுப்பூசி கொள்கையை நம்பி இருக்கும் போது … Read more