இந்தியாவில் வருகிறதா ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் ரயில்?

சுற்று சூழல் பாதுகாப்பு கருதியும், பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டை குறைக்கும் பொருட்டும்  இந்திய ரயில்வேயில் ஹைட்ரஜன் வாயுக்கள் மூலம் இயங்கும் ரயிலை தொடங்க இருப்பதாக ரயில்வே வாரியம் முடிவெடுத்துள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளி வெகு விரைவில் கோரப்படும் எனவும் அறிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து ரயில் போக்குவரத்தாகவே இருக்கிறது. இதில் பெரும்பாலான ரயில்கள் டீசல் லோகோமோட்டிவ் ஆகவே இருக்கும் நிலையில் ஒரு நாளுக்கு இவை வெளியிடும் கார்பன்-டை-ஆக்ஸைடு என்பது மிக மிக அதிகம். … Read more

ஏழு பதக்கங்களுடன் ஒலிம்பிக்கை நிறைவு செய்கிறது இந்தியா!

ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் என்று மொத்தம் ஏழு பதக்கங்களுடன் டோக்கியோ ஒலிம்பிக்கை நிறைவு செய்திருக்கிறது இந்தியா. இதற்கு முன்னர் ஒலிம்பிக்கில் அதிகபட்சமாய் ஆறு பதக்கங்கள் பெற்றதே சாதனையாக இருந்த நிலையில் இந்த ஒலிம்பிக்கில் அதை பின்னுக்கு தள்ளி ஏழு பதக்கங்களை பெற்றிருக்கிறது இந்தியா. இந்தியா பெற்ற ஏழு பதக்கங்கள் 1) மீரா பாய் சானு – சில்வர் (49 கிலோ பிரிவு பளுதூக்குதல்) 2) ஆடவர் ஹாக்கி அணி – வெண்கலம் 3) … Read more

ஈட்டி எறிதல்: தங்கம் வென்றார் நீராஜ் சோப்ரா – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் உலகின் தலை சிறந்த வீரர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி தங்கம் வென்று அசத்தி இருக்கிறார் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீராஜ் சோப்ரா.தனது இரண்டாவது எறிதலில் அவர் எறிந்த 87.58 மீட்டர் தூரம் அவருக்கு உலக அரங்கில் தங்கத்தை பெற்று தந்திருக்கிறது. ஏற்கனவே இதற்கு முந்தைய தகுதிச்சுற்றில் தனது முதல் எறிதலிலேயே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார் நீராஜ் சோப்ரா. இந்த நிலையில் இறுதிப்போட்டியில் தங்கம் எப்படியேனும் வெல்வார் என்று … Read more

மல்யுத்தம்: வெண்கலம் வென்றார் பஜ்ரங் புனியா – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில், வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கஜகஸ்தானின் தவுலத் நியாஸ்பெகோவை 8-0 என்ற புள்ளி கணக்கில் எளிதாக வென்று இந்தியாவின் பதக்க பட்டியலில் மேலும் ஒரு பதக்கத்தை சேர்த்தார். 65 கிலோ எடைபிரிவு, வெண்கல பதகத்திற்கான போட்டி, இந்தியாவின் பஜ்ரங் புனியாவிற்கும் கஜகஸ்தானின் தவுலத்திற்ற்கும் இடையே நடைபெற்றது. தொடக்கம் முதலே புயல் போல களத்தில் நின்ற பஜ்ரங் புனியா எதிராளிக்கு ஒரு புள்ளி கூட … Read more

தமிழகத்தில் செப்டம்பர் 1-இல் பள்ளிகள் திறப்பா…?

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் 50 சதவிகிதம் மாணவர்களுடன் பள்ளிகள் இயங்க அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1-இல் இருந்து ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இயக்கப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் முறையான கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளை எல்லா பள்ளிகளும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் 50 சதவிகித மாணவர்களுடன் மட்டுமே பள்ளிகள் இயங்க வேண்டும் என்றும் தமிழக அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. “ இரண்டு வருடங்கள் … Read more

கோல்ப்: நூலிழையில் பதக்கத்தை தவற விட்ட அதிதீ அசோக் – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் 2020 கோல்ப் மகளிர் பிரிவில் இந்தியாவிற்கு ஒரு பதக்கம் கிடைத்து விடும் என்று நேற்று வரை ரசிகர்கள் நம்பிக்கையோடு இருந்த நிலையில் நூலிலையில் தகர்ந்தது அந்த நம்பிக்கை. தொடர்ந்து நிலவி வந்த மோசமான வானிலை, ஆட்டத்தின் நிலையையே மாற்றியதால் நான்காவது இடத்தை பிடித்து பதக்கத்தை தவற விட்டார் அதிதீ அசோக். கோல்ப் மகளிர் ஆட்டத்தில் நேற்றைய தினம் வரை இரண்டாவது இடத்தை தக்க வைத்துக்கொண்டு இந்தியாவிற்கு பதக்க நம்பிக்கை கொடுத்து வந்த அதிதீ அசோக் … Read more

வலிமை இரண்டாவது சிங்கிள் வெகு விரைவில் வெளியாகும் – யுவன்

வலிமை படத்தின் இரண்டாவது சிங்கிள் வெகுவிரைவில் வெளியாகும் என்று தனியார் மீடியாவிற்கு யுவன் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன் தான் ‘ நாங்க வேற மாறி ‘ என்னும் முதல் சிங்கிள் வெளியாகி இணையம் முழுக்க வைரல் ஆன நிலையில், தற்போது யுவன் இரண்டாவது சிங்கிளும் வெகு விரைவில் வெளியாகும் என்று கூறி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் பின்னனி இசை பற்றி யுவனிடம் கேட்ட போது நீங்கள் எதிர்பார்த்ததை … Read more

50 கோடியை கடந்தது தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை – மத்திய அரசு

இந்தியாவில் நேற்றைய தினம் வரை ஐம்பது கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை ஐம்பது கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 38.9 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசியையும் 11.1 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் செலுத்திகொண்டுள்ளனர். மத்தியபிரதேசம்,குஜராத்,ராஜஸ்தான்,மஹாராஸ்டிரம் மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 99.4 … Read more

குழந்தை தொழிலாளர்களை அதிகரித்திருக்கிறதா இந்த கொரோனோ காலம்…?

இரண்டு வருட இந்த கொரோனோ காலத்தில் இந்த உலகில் தான் எத்தனை மாற்றம்..! அந்த மாற்றங்களுள் நிகழ்ந்தவை தான் இந்த விரும்ப தகாத மாற்றமும்..! புள்ளி விவரங்கள் இல்லை, ஆனால் கண்களால் விவரமாய் பார்க்க முடிகிறது.  ஆம் இந்த இரண்டு வருடத்தில் இந்தியாவில் அதிகரித்திருக்கிறது குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை. வெளியில் வேலை இல்லை, வீட்டில் வருமானம் இல்லை, தகுந்த தொழில் இல்லை ஆனால் இருப்பதெல்லாம் பண தேவையும் கஸ்டமும். நடுத்தர மனிதன் என்ன தான் செய்வான்?, பள்ளிகள் இல்லாததை … Read more

தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் ஒலித்த மந்திரங்கள்!

தமிழக அரசு கொண்டு வந்த ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ என்ற திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக இந்து அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் 47 கோயில்களில் தமிழில் மந்திரங்கள் ஓதப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன்படி சமஸ்கிருத மந்திரங்கள் மட்டுமே ஒலித்த இராஜ இராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலின் கருவறைக்குள் இன்று முதல், தமிழில் மந்திரங்கள் ஒலித்தன. அர்ச்சனை என்று நீட்டியவுடன் புரியாத மொழியில் அர்ச்சகர் செய்யும் மந்திரங்கள் எல்லாம் இனி தமிழில் ஒலிக்கும் என்பதால் பக்தர்களிடையே … Read more