மல்யுத்தம்: அரையிறுதியில் பஜ்ரங் புனியா தோல்வி – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் 2020 ஆடவர் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, அஜர்பைஜானின் ஹாஜி அலியேவ்விடம் 12-5 என்ற கணக்கில் தோல்வியுற்றார். இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியவில்லையெனினும் இதற்கு பின் அவர் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் விளையாட இருக்கிறார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய அஜர்பைஜானின் ஹாஜி அலியேவ், 12-5 என்ற கணக்கில் எளிதாக பஜ்ரங் புனியாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். தங்கம் வெல்வால் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பஜ்ரங் புனியா அரையிறுதியில் … Read more

கோல்ப் விளையாட்டில் பதக்கம் பெறுகிறதா இந்தியா? – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் 2020 மகளிர் கோல்ப் ஆட்டத்தில், நடந்து முடிந்த மூன்று சுற்றுகளின் முடிவில் இரண்டாவது இடத்தை பிடித்து சில்வர் வெல்லும் வாய்ப்பில் நிற்கிறார் இந்திய கோல்ப் வீரர் அதிதீ அசோக். மகளிர் கோல்ப் பிரிவில் மூன்று சுற்றுகளின் முடிவில் அமெரிக்காவின் நெல்லி கொர்டாவிற்கு பிறகு இரண்டாவது இடத்தில் அதிதீ அசோக் தொடர்ந்து சில்வர் வெல்லும் வாய்ப்பில் இருக்கிறார். தொடர்ந்த வானிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது ஆட்டம் தடைபடுகிறது. இறுதிச்சுற்றிலும் மோசமான வானிலை  தொடருமானால் இந்தியாவிற்கு மற்றுமொரு … Read more

STR 47 – வெந்து தணிந்தது காடு

வேல்ஸ் இன்டர்நேசனல் பிலிம் – கவுதம் மேனன் – ஏ ஆர் ரகுமான் – சிலம்பரசன் இணையும் படத்திற்கு முதலில் ’நதிகளிலே நீராடும் சூரியன்’ என்று பெயரிடப்பட்டிருந்தது. தற்போது அது ’வெந்து தணிந்தது காடு’ என மாற்றப்பட்டுள்ளது. கவுதம் மேனன் – சிம்பு ஏற்கனவே இணைந்து ’விண்ணைத்தாண்டி வருவாயா’ என்னும் படத்தில் மாபெரும் ஹிட் அடித்திருந்தது. பின்னர் அடுத்து இந்த கூட்டணி எப்போது இணையும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் தற்போது வெந்து தணிந்தது காடு … Read more

மல்யுத்தம்: அரையிறுதியில் பஜ்ரங் புனியா – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, ஈரானின் மோர்டஸா கியாஷியை 2-1 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா , ஈரானின் மோர்டஸாவை எதிர்கொண்டார். முதலில் மோர்டஸாவே முன்னிலை வகித்த நிலையில் அதற்கு பின் சுதாரித்து அதிரடியாக விளையாடிய பஜ்ரங் புனியா, 2-1 என்ற கணக்கில் மோர்டஸாவை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இன்றே நடைபெறும் அந்த அரையிறுதி … Read more

வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் கிரேட் பிரிட்டனிடம் தோல்வியுற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் 2020 மகளிர் ஹாக்கி பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி, கிரேட் பிரிட்டனிடம் 3-4 என்ற புள்ளி கணக்கில் போராடி தோல்வியுற்றது. மகளிர் ஹாக்கி வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி, கிரேட் பிரிட்டனை எதிர் கொண்டது. இரு அணி வீரர்களும் அனல் பறக்க களத்தில் நின்றதால் ஆட்டம் கடைசி வரை சூடு பிடித்தது. பதக்கத்திற்காக கடைசி வரை களத்தில் போராடிய இந்திய அணி இறுதியில் 3-4 என்ற கணக்கில் … Read more

செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா பிரபல சின்னத்திரை நடிகரை மணக்கிறாரா?

செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா, பிரபல சின்னத்திரை நடிகரை விரைவில் மணம் முடிக்க இருப்பதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். செம்பருத்தி இந்த சீரியலை அறியாதோர் தமிழ்நாட்டில் யாரும் இருக்க வாய்ப்பில்லை அதிலும் அந்த சீரியலில் பார்வதி என்ற பெயரில் வரும் கதாபாத்திரமான ஷபானாவிற்கென்று தனிரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் ஷபானாவிற்கும் பிரபல சின்னத்திரை நடிகருக்கும் சில தினங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக சின்னத்திரை வட்டாரங்களில் தகவல்கள் கசிந்து வந்தன. தற்போது அந்த தகவல்களை உறுதிப்படுத்தியிருக்கிறார் ’பாக்கியலெட்சுமி’ தொடரில் நடிக்கும் … Read more

மல்யுத்தம்: வெள்ளிப்பதக்கம் வென்றார் ரவிக்குமார் தாஹியா- டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா 4-7 என்ற கணக்கில் ரஷ்ய வீரர் சாவுர் யுகுயேவிடம் போராடி தோற்றார். தங்கம் எட்டவில்லை எனினும் பதக்க பட்டியலில் இந்தியாவிற்கு மற்றும் ஒரு வெள்ளியை பெற்று தந்திருக்கிறார் ரவிக்குமார் தாஹியா. அரையிறுதியில் கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனயேவ்வை அதிரடியாக தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார். ரவிக்குமார் தாஹியா. தங்கம் வெல்வார் என்று அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதிப்போட்டியில் 4-7 என்ற கணக்கில் … Read more

சொகுசு கார் வழக்கு: 48 மணி நேரத்திற்குள் வரியை செலுத்த வேண்டும் நடிகர் தனுஷ்சிற்கு நீதிமன்றம் கெடு

சொகுசு கார் வழக்கில் நடிகர் தனுஷ் அடுத்த 48 மணி நேரத்திற்குள் காருக்கான மீதி 50 சதவிகித வரியை செலுத்தியாக வேண்டும் என கெடு விதித்துள்ளது நீதிமன்றம். நடிகர் தனுஷ் 2015 ஆம் ஆண்டு வெளி நாட்டிலிருந்து வாங்கிய சொகுசு காருக்கு ரூபாய் 60.66 லட்சம் நுழைவு வரி விதிக்கப்பட்டது. இந்த நுழைவு வரியை எதிர்த்து நடிகர் தனுஷ் தரப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. கடந்த ஐந்து வருடமாக நடைபெற்ற இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் … Read more

இயற்கையை மீட்டு தந்திருக்கிறதோ இந்த கொரோனோ காலம்…?

கொரோனோ என்னும் நுண்ணுயிரி மனித உயிர்களை இன்றளவும் வதைத்து வரும் நிலையில் அது உலகின் இயற்கையை மீட்டு தந்திருக்கிறது என்று கூறினால் நம்ப முடிகிறதா…? ஆம் உண்மையே..! காற்றின் தரம் உயர்ந்திருக்கிறது. நீரின் தரம் உயர்ந்திருக்கிறது. உலக வெப்பமயமாதல் குறைந்திருக்கிறது. இந்த கொரோனோ இயற்கைக்கு மட்டும் வரம் போல…! உலகமே கொரோனோ என்னும் கொடூர கிருமியிடம் சிக்கி ஊரடங்கு என்னும் நிலையில் வீட்டிற்குள்ளேயே அடங்கி கிடக்கையில் சத்தமின்றி அரங்கேறி இருக்கிறது இந்த இயற்கை மாறுதல்கள். தொழிற்சாலைகள் இயங்கவில்லை, … Read more

நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ நவம்பரில் ரிலீஸ்…?

’கூட்டத்தில் ஒருவன்‘ படத்தின் இயக்குனரான ஞானவேல் மற்றும் சூர்யா இணையும் ஜெய் பீம் படம் நவம்பரில் அமேசான் வலைதளத்தில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  நடிகர் சூர்யா, ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் இணையும் ஜெய் பீம் திரைப்படம் நவம்பரில் அமேசான் வலை தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. நடிகர் சூர்யாவிற்கு இது 39-ஆவது படம் ஆகும். மேலும் அவரின் தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெயின்மெண்ட் தான் இந்த … Read more