பிரபல நடிகையுடன் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி

இன்றைய தேதியில் மிகவும் பிஸியான நடிகர் என்றால் அது கண்டிப்பாக விஜய்சேதுபதி மட்டுமே. உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் படம் தொடங்கி லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் வரை பல படங்களை கையில் வைத்திருக்கிறார். இதில் புதிதாக இன்னொரு திரைப்படத்திற்கு தெலுங்கில் பிரபலமாகி வரும் நடிகை கீர்த்தி ஷெட்டியுடன் நடிப்பதற்கு விஜய்சேதுபதியை கேட்டிருக்கிறார்கள். ஆனால் அவர் பட்டிதொட்டியெல்லாம் அங்கு ஹிட்டடித்த “உப்பேனா” திரைப்படத்தில் இந்தப் பெண்ணுக்கு … Read more

ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடிக்கும் ‘ENEMY’ படம் வெளியாகும் தேதி அறிவிப்பு!

ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடிக்கும் ‘ENEMY’ படத்தின் வெளியீட்டு தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்யா, விஷால், மிர்நளினி, மம்தா மோகன் தாஸ் என்று மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இணையும் ENEMY படத்தை, அரிமா நம்பி, இருமுகன் போன்ற வெற்றிப்படங்களை தந்த ஆனந்த் சங்கர் இயக்குகிறார். ஜூலை அன்று வெளியான இந்த படத்தின் டீசர் அமோக வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இந்த படம் தீபாவளி 2021 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே … Read more

முத்தையா படத்தில் அறிமுக நாயகியாக களம் இறங்கும் இயக்குநர் சங்கரின் மகள் அதிதீ சங்கர்!

பிரம்மாண்டத்தின் உச்சமாக அறியப்படும் இயக்குநர் சங்கர் அவர்கள், தெலுங்கு பட உலகிற்கு ராம் சரண்னுடன் இணைந்து அறிமுகமாக இருக்கும் அதே நிலையில், அவரது மகள் அதிதீ சங்கர், இயக்குநர் முத்தையா, கார்த்தி மற்றும் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா என்று பெரிய பட்டாளங்கள் இணையும் விருமன் படத்தில் அறிமுக கதாநாயகியாக இணைய இருக்கிறார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2D எண்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரிக்க இருக்கும் நிலையில் ,நடிகர் சூர்யா சிவக்குமார் தனது ட்விட்டர் … Read more

ட்ரென்டிங்கில் ‘டிக்கிலோனா’ படத்தின் இரண்டாவது டிரைலர்

சந்தானம், யோகி பாபு, மொட்ட ராஜேந்தர், முனிஸ்காந்த், ஆனந்த்ராஜ் என்று மிகப்பெரிய சிரிப்பு பட்டாளங்களே களம் இறங்கும் டிக்கிலோனா படத்தின் இரண்டாவது ட்ரெயிலர் நேற்று இணையத்தில் வெளியான நிலையில் இன்று ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. காமெடி கலந்த அறிவியல் பூர்வ படமாக ட்ரெயிலரை பார்க்கும் போது தெரிந்தாலும் படம் வெளி வந்தாலே அதைப்பற்றி முழுமையாக விவரிக்க முடியும். கார்த்திக் யோகி இயக்கியிருக்கும் இந்த படத்தை தயாரிப்பாளர்கள் கோபிநாதன்,வினு,வீர சங்கிலி என மூவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். முக்கியமாக படத்திற்கு … Read more

25 கோடி பார்வையாளர்களை கடந்திருக்கும் ’வாத்தி கம்மிங்’ பாடல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து கடந்த பொங்கலுக்கு வெளியாகி இருந்த மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்திருந்தது. இந்த நிலையில் தான் அந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலான வாத்தி கம்மிங் பாடல் தொடர்ந்து ட்ரென்டிங்கில் இருந்தது. உலகம் முழுக்க ரீல்ஸ்களில் ட்ரென்ட் அடித்த வாத்தி கம்மிங் பெரிய பெரிய பிரபலங்களையும் ஈர்த்த நிலையில் தற்போது 25 கோடி பார்வையாளர்களை எட்டி இருக்கிறது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கும் இந்த பாடல் வெளி … Read more

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ‘2டி என்டர்டெயிண்ட்மென்ட்’ பெயரில் மோசடி!

பசங்க 2, 24, சூரரைப்போற்று உள்ளிட்ட வெற்றிப்படங்களை தயாரித்த நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ’2டி என்டர்டெயிண்ட்மென்ட்’ பெயரில் ஒரு சிலர் மோசடி செய்து வருவதாக தயாரிப்பு நிறுவனம் அறிக்கை விடுத்துள்ளது. 2டி என்டர்டெயிண்ட்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் லாகோ உள்ளிட்டவைகளை பயன்படுத்தி, நடிகர்கள் மற்றும் நடிகையர்கள் தேர்வு நடத்தி பணம் பறித்துக்கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் படி இந்த அறிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் எங்கள் … Read more

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகும் அனபெல் சேதுபதி!

விஜய் சேதுபதி, டாப்சி, இயக்குநர் தீபக் சுந்தர் ராஜன் இணையும் அனபெல் சேதுபதி படத்தை தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் தயாரித்திருக்கிறார்கள். பட வேலைகள் முழுமையாக முடிந்த நிலையில் படத்தின் வெளியீடு உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் வாங்கியிருக்கிறது. காமெடி கலந்த பேய் படமாக அறியப்படும் அனபெல் சேதுபதி செப்டம்பர் 17 அன்று டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியிடப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. திரையரங்குகள் திறந்திருக்கும் நிலையிலும் கூட பெரும்பாலான படங்கள் … Read more

ஓடிடி தளத்தில் வெளியாகும் சாணிக்காயிதம்

இயக்குநர் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் சாணிக்காயிதம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. ராக்கி படத்தை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தான் இப்படத்தையும் இயக்குகிறார். இந்த நிலையில் தான் இப்படத்தின் வெளியீடு உரிமையை பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைம் வாங்கி இருக்கிறது. இயக்குநராக இருந்த செல்வராகவன் ஒரு முழுநீளப்படத்தில் முதல் முதல் நடிகராக நடிக்கும் படம் என்றால் அது சாணிக்காயிதம் தான். மேலும் செல்வராகவன் நடிகர் … Read more

இன்று கேப்டன் விஜயகாந்த்க்கு பிறந்தநாள்!

திரைப்பட நடிகர் மற்றும் முன்னாள் எதிர்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். விருதுநகர் மாவட்டம் அருப்பு கோட்டையில் பிறந்து மதுரையில் வளர்ந்தவர். சிறு வயதில் அரிசி ஆலைகளில் வேலை பார்த்துக் கொண்டே படித்துக்கொண்டிருந்தவர் சினிமாவின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக படிப்பின் மேல் இருக்கும் நாட்டத்தை கைவிட்டார். விஜயகாந்த் அவர்களின் இயற்பெயர் நாராயணன் (எ) விஜய ராஜ். 1978-இல் வெளிவந்த ‘இனிக்கும் இளமை ‘ என்னும் படத்தில் தான் முதன் முதலில் அறிமுகமானார் விஜய … Read more

விக்ரம் படக்கூட்டணியில் இணையும் நடிகர் நரைன்!

Vikram movie update Kamalhassan Narain

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பஹாத் பசில், ஆன்டனி வர்கீஸ் என்று மிகப்பெரிய பட்டாளங்கள் களம் இறங்கும் விக்ரம் பட கூட்டணியில் தற்போது நடிகர் நரைனும் இணைந்துள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம்,அஞ்சாதே மற்றும் கடைசியாக கைதி என்று தான் நடித்த படத்தில் எல்லாம் தன் நடிப்பை நிரூபித்து இருப்பார் நரேன். விக்ரம் படத்தில் மட்டும் என்ன தன் நடிப்பை விட்டு வைப்பாரா என்ன கலக்குவார் பொறுத்திருந்து பார்க்கலாம். … Read more