ஹேஸ்டாக் போரில் மாஸ்டரை வலிமையாக முந்திய ’வலிமை’

கடந்த ஜூன் மாதம் வரை ட்விட்டரில் இந்திய அளவில் அதிகமாக பகிரப்பட்ட ஹேஸ்டாக்குகளில் வலிமை முதலிடத்தை பிடித்துள்ளதாக ட்விட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒரு காலத்தில் தெருக்களத்தில் நின்று தன் ஹீரோவின் பேனர், போஸ்டர்களை ஒட்டுவதற்கு இடத்தை பிடிப்பதற்காக இரு வேறு ஹீரோக்களின் ரசிகர்கள் சண்டையிட்டு வந்தனர். அது கைக்கலப்பில் கூட கொண்டு போய் முடியும். ஆனால் இன்றெல்லாம் அந்த ரசிக சண்டைகள் டிஜிட்டல் சண்டைகளாக மாறி உள்ளன. லைக்குகள்,சேர்கள்,ட்ரென்டிங்குகள்,வசூல்கள் என்று இதை வைத்து தான் இன்று ரசிகர்கள் … Read more

வெளியானது விக்ரம் நடிக்கும் மகான் படத்தின் முன்னோட்டம்

தயாரிப்பாளர் லலித் குமார் – இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் – இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் – விக்ரம் – துருவ் விக்ரம் – சிம்ரன் – சிம்ஹா என்ற பெரிய கூட்டணி இணையும் மகான் திரைப்படத்தின் முன்னோட்டம் சத்தமில்லாமல் வெளியாகி இணையங்களில் பெரிய சத்தமிட்டு வைரலாகி கொண்டிருக்கிறது. சந்தோஷ் நாராயணின் அசத்தலான பறை இசையில் தொடங்கும் முன்னோட்டம், தசரா குழுவில் வேஷமிடும் ஒரு குழுவை காண்பித்து, அதற்கு பின்னர் வரும் சீனில் விக்ரம் தனது பைக்கில் … Read more

தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிகளுக்கு தயாராகிறாரா அஜித்?

திரைத்துறை தவிர தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதித்து வரும் அஜித் தற்போது தேசிய அளவிலான துப்பாக்கி போட்டிகளுக்கு தயாராகி வருவதாக அஜித் அவர்களின் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. திரையில் அஜித் அவர்கள் சாதிக்காதது எதுவும் இல்லை. ஏற்கனவே கார் ரேஸ், மற்றும் சிறிய இலகு ரக விமான தயாரிப்பு என்று நடிப்பதை தவிர வேறு சில துறைகளிலும் ஈடுபட்டு வந்த அஜித் இடையில் துப்பாக்கி சுடுதலிலும் பயிற்சி பெற்று வந்தார். சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் நடைபெற்ற … Read more

62-ஆவது வருட திரைப்பயணத்திற்குள் அடி எடுத்து வைக்கும் கமல் என்னும் ஆத்ம நடிகன்

1960-இல் ‘களத்தூர் கண்ணம்மா’ என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக இந்த சினிமா உலகிற்கு அறிமுகம் ஆனார் கமல்ஹாசன். இன்றோடு இந்த மனிதன் சினிமாவிற்கு வந்து 62 வருடம் ஆகிறது. 220 படங்களுக்கு மேல் நடித்தாகிற்று. இன்றும் தீரவில்லை இந்த மனிதனுக்குள் இருக்கும் அந்த நடிப்பின் ஊற்று.  நடிகர்,இயக்குநர்,தயாரிப்பாளர்,நடன இயக்குனர்,எழுத்தாளர் என்று எத்தனை பரிணாமங்கள் தான் இந்த 62 வருடத்திற்குள்! சிறந்த நடிகர் என்னும் முறையில் நான்கு தேசிய விருதுகள், சிறந்த தயாரிப்பாளர் என்னும் முறையில் ஒரு தேசிய … Read more

வெளியாகிறது நடிகர் விவேக் கடைசியாக தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி!

நடிகர்,மக்களின் கலைஞர்,இயற்கையின் பாதுகாவலன் என்றெல்லாம் மக்களால் அழைக்கப்படும் கலைவாணர் விவேக் அவர்கள் திடீரென்று மாரடைப்பால் கடந்த ஏப்ரல் அன்று காலமானார். தற்போது அவர் கடைசியாக தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான LOL- எங்க சிரி பாப்போம் என்னும் நிகழ்ச்சி அமேசான் வலை தளத்தில் ஆகஸ்ட் 27 அன்று வெளியாக இருப்பதாக அறியப்படுகிறது. மிர்ச்சி சிவா மற்றும் கலைவாணர் விவேக் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி மொத்தம் ஆறு பகுதிகளை கொண்டது.  இதில் RJ விக்னேஷ் காந்த், பிரேம்ஜி அமரன், … Read more

விஜய்யுடன் இணையும் செல்வராகவன்…?

நடிகர் விஜய் – பூஜா ஹெக்டே – இயக்குநர் நெல்சன் – சன்பிக்சர் நிறுவனம் ஆகியோர் ஒன்றாக இணையும் ‘ BEAST ‘ படத்தில் தற்போது செல்வராகவனும் இணைய இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. செல்வராகவன் – விஜய் கூட்டணியில் ஒரு படம் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு விஜய் படத்தில் இயக்குநர் செல்வராகவன் நடிக்கிறார் என்ற தகவல் அவர்களை குஷி படுத்தியுள்ளது. ஏற்கனவே அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் சாணிக்காயிதம் என்னும் படத்தில் நடிகராக களம் இறங்கியுள்ள செல்வராகவன் ‘ … Read more

வலிமை இரண்டாவது சிங்கிள் வெகு விரைவில் வெளியாகும் – யுவன்

வலிமை படத்தின் இரண்டாவது சிங்கிள் வெகுவிரைவில் வெளியாகும் என்று தனியார் மீடியாவிற்கு யுவன் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன் தான் ‘ நாங்க வேற மாறி ‘ என்னும் முதல் சிங்கிள் வெளியாகி இணையம் முழுக்க வைரல் ஆன நிலையில், தற்போது யுவன் இரண்டாவது சிங்கிளும் வெகு விரைவில் வெளியாகும் என்று கூறி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் பின்னனி இசை பற்றி யுவனிடம் கேட்ட போது நீங்கள் எதிர்பார்த்ததை … Read more

STR 47 – வெந்து தணிந்தது காடு

வேல்ஸ் இன்டர்நேசனல் பிலிம் – கவுதம் மேனன் – ஏ ஆர் ரகுமான் – சிலம்பரசன் இணையும் படத்திற்கு முதலில் ’நதிகளிலே நீராடும் சூரியன்’ என்று பெயரிடப்பட்டிருந்தது. தற்போது அது ’வெந்து தணிந்தது காடு’ என மாற்றப்பட்டுள்ளது. கவுதம் மேனன் – சிம்பு ஏற்கனவே இணைந்து ’விண்ணைத்தாண்டி வருவாயா’ என்னும் படத்தில் மாபெரும் ஹிட் அடித்திருந்தது. பின்னர் அடுத்து இந்த கூட்டணி எப்போது இணையும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் தற்போது வெந்து தணிந்தது காடு … Read more

சொகுசு கார் வழக்கு: 48 மணி நேரத்திற்குள் வரியை செலுத்த வேண்டும் நடிகர் தனுஷ்சிற்கு நீதிமன்றம் கெடு

சொகுசு கார் வழக்கில் நடிகர் தனுஷ் அடுத்த 48 மணி நேரத்திற்குள் காருக்கான மீதி 50 சதவிகித வரியை செலுத்தியாக வேண்டும் என கெடு விதித்துள்ளது நீதிமன்றம். நடிகர் தனுஷ் 2015 ஆம் ஆண்டு வெளி நாட்டிலிருந்து வாங்கிய சொகுசு காருக்கு ரூபாய் 60.66 லட்சம் நுழைவு வரி விதிக்கப்பட்டது. இந்த நுழைவு வரியை எதிர்த்து நடிகர் தனுஷ் தரப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. கடந்த ஐந்து வருடமாக நடைபெற்ற இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் … Read more

நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ நவம்பரில் ரிலீஸ்…?

’கூட்டத்தில் ஒருவன்‘ படத்தின் இயக்குனரான ஞானவேல் மற்றும் சூர்யா இணையும் ஜெய் பீம் படம் நவம்பரில் அமேசான் வலைதளத்தில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  நடிகர் சூர்யா, ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் இணையும் ஜெய் பீம் திரைப்படம் நவம்பரில் அமேசான் வலை தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. நடிகர் சூர்யாவிற்கு இது 39-ஆவது படம் ஆகும். மேலும் அவரின் தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெயின்மெண்ட் தான் இந்த … Read more