டெல்டா பிளஸ் கொரோனோ தொற்றுக்கு மஹாராஷ்டிரத்தில் 5 பேர் பலி

மஹாராஷ்டிரத்தில் டெல்டா பிளஸ் வகை கொரோனோ தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் டெல்டா பிளஸ் தொற்றுக்கு மஹாராஷ்டிரத்தில் மட்டும் 5 பேர் பலியாகி உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. இதில் இரண்டு தவணையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும் டெல்டா பிளஸ் தொற்றுக்கு பலியாகி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கடந்த ஜூலை 21 அன்று டெல்டா பிளஸ் வகை கொரோனோ தொற்று உறுதி … Read more

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 38,867 பேருக்கு கொரோனோ தொற்று, 478 பேர் தொற்றுக்கு பலி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக கொரோனோ தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 38,867-ஆக உள்ளது. இது நேற்றைய தொற்று எண்ணிக்கையை விட 3.6 சதவிகிதம் குறைவு. மேலும் நேற்றைய ஒருநாளில் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 478-ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்தமாக கொரோனோவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 4,30,732-ஆக உயர்ந்துள்ளது என இந்திய மருந்துவ அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் மட்டுமே நேற்றைய ஒரு நாள் தொற்று பாதிப்பு 20,452-ஆக உள்ளது. ஒட்டு மொத்த … Read more

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படக் கூடிய நெகிழி வகை பொருள்களுக்கு தேசம் முழுக்க தடை

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு எறியக்கூடிய அனைத்து நெகிழி வகை பொருள்களுக்கும் 2022 முதல் தேசம் முழுக்க தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.மண்,கடல்,காடு என்று பூமியின் எங்கு பார்த்தாலும் தவிர்க்க முடியாத குப்பைகளாய் இருக்கிறது இந்த நெகிழிகள். இன்னும் ஆயிரம் வருடம் கழித்து மண்ணைத்தோண்டினாலும் அது அழியாமல் அப்படியே இருக்கும். எரித்தாலும் காற்றை மாசுபடுத்தும் புதைத்தாலும் பூமியில் மண்ணின் தன்மையை மாசுபடுத்தும். அதனை கருத்தில் கொண்டே 2022 முதல் தேசம் முழுக்க ஒரு முறை பயன்படுத்தப்பட்டு … Read more

தன்னம்பிக்கை என்பதற்கு அர்த்தம் கேட்டால் ‘உசேன் போல்ட்’ என்ற ஒரு பெயரில் சொல்லி விடலாம்

உலக அரங்கு, ஸ்பிரின்ட் களம், ஒட்டு மொத்த போட்டியாளர்களும் சிறுத்தை வேகத்தில் ஓடுகின்ற ஒரு களம். ஆனால் அங்கு அந்த சிறுத்தைகளை எல்லாம் முந்திக் கொண்டு ஒரு மின்னல் சிரித்துக்கொண்டே இலக்கை அடைகிறது. அவர் தான் உசேன் போல்ட். எது தன்னம்பிக்கை என்றால் இலக்கிற்கு அருகில் சென்று திரும்பி பார்த்து தன் பின்னால் ஓடுபவர்களிடம் நான் தான் இலக்கை முதலில் அடைய போகிறேன் என்பதை தன் புன்னகையில் அவர்களுக்கு வெளிப்படுத்தும் அந்த சுபாவம் தான். ஆம் தன் … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 40,120 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று, 585 பேர் தொற்றுக்கு பலி

தொடர்ந்து ஏற்றமாகவும் இறக்கமாகவும் இருந்து வரும் கொரோனோ தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் சராசரியாக நாற்பதாயிரம் என்ற நிலைக்கு அருகில் எப்போதும் இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக கொரோனோ தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 40,120 ஆகவும் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 585 -ஆக உள்ளதாகவும் இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது. அடுத்தடுத்து வருகின்ற விழாக்காலங்கள், கோவில் நிகழ்வுகள், அரசு நிகழ்வுகள் என்று மக்கள் மொத்தமாய் கூடும் நிகழ்வுகளுக்கும், பண்டிகை தினங்களுக்கும் … Read more

52 கோடியை கடந்து விட்டது தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை – இந்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் 52 கோடியை கடந்தது தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை. ஒன்றிய அரசு அளித்த 54.04 கோடி தடுப்பூசிகளுள் மாநில மற்றும் யூனியன் பிரேதசங்கள் 52.36 கோடி தடுப்பூசிகளை முழுமையாக உபயோகித்து இருப்பதாகவும் 2.5 கோடி தடுப்பூசிகளை மிச்சம் வைத்திருப்பதாகவும் இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. அதிக தடுப்பூசி செலுத்திய மாநிலங்களுள் முதல் ஐந்து இடங்களை உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா,குஜராத்,மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் பிடிக்கின்றன. உலக அளவில் அதிகபட்ச தடுப்பூசி செலுத்திய நாடுகளுள், … Read more

மீண்டும் அதிகரிக்கிறது கொரோனோ பாதிப்பு – கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,195 பேருக்கு தொற்று

தொடர்ந்து மருத்துவ வல்லுநர்கள் மூன்றாவது அலை குறித்து எச்சரித்து வந்தாலும் மக்கள் கொரோனோ தடுப்பு முறைகளை முறையாக கையாளாதாதன் விளைவு மீண்டும் அதிகரித்து வருகிறது கொரோனோ தொற்று. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதியதாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,195-ஆகவும் தொற்றின் காரணமாக 490 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய மருந்துவ கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது. நேற்றைய ஒரு நாளில் தொற்றுக்கு 490 பேர் உயிரிழந்ததன் மூலம் மொத்த உயிரிழப்பு 4,29,669 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தடுப்பூசி … Read more

GSLV F10 ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்தது – இஸ்ரோ தலைவர் சிவன்

புவி கண்காணிப்பு செயற்கைகோளுடன் விண்ணில் ஏவப்பட்ட GSLV F10 தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோல்வியில் முடிந்ததாக இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்துள்ளார். இயற்கை பேரிடர்,சுற்றுச்சூழல் மற்றும் வனவியல் ஆராய்ச்சிக்காக EOS-3 எனப்படும் அதிநவீன கண்காணிப்பு செயற்கைகோளுடன் விண்ணில் ஏவப்பட்ட GSLV F10, கிரையோஜெனிக் என்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோல்வியில் முடிந்ததாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவன் அறிவித்துள்ளார். கொரோனோவின் காரணமாக தொடர்ந்து தாமதமான இஸ்ரோவின் பல்வேறு செயல்பாடுகளுக்கு பின் தற்போது தொடங்கிய … Read more

அடுத்த கட்டமாக உலக சாம்பியன்ஷிப் வெல்வதே இலக்கு – நீரஜ் சோப்ரா

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்றிருந்த நீரஜ் சோப்ராவிற்கு இந்திய தடகள சம்மேளனம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நீராஜ் சோப்ரா தன்னுடைய அடுத்த கட்ட இலக்கு என்பது உலக சாம்பியன்சிப் வெல்வதே என்றும் அதற்கான முன்னெடுப்புகளை இப்போதிருந்தே தொடங்க இருப்பதாகவும் தன் கருத்துக்களை தெரிவித்து இருந்தார். ஏற்கனவே ஆசிய விளையாட்டு போட்டியிலும் காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றிருந்த நீராஜ் சோப்ரா தற்போது நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் தனது … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 38,353 பேருக்கு தொற்று,497 பேர் பலி

மூன்றாவது அலை எப்போது வேண்டுமானாலும் தாக்க கூடும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வரும் நிலையில் தொடர்ந்து சராசரியாக கொரோனோ தொற்று இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு நாளில் மட்டும் புதியதாக 38,353 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 497 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த உயிரிழப்பு 4,29,179-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 51 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக இந்திய … Read more